Exclusive: விஜய்டிவி மீது புகாரளித்தது ஏன்? மதுமிதா விளக்கம்

Exclusive: விஜய்டிவி மீது புகாரளித்தது ஏன்? மதுமிதா விளக்கம்
மதுமிதா
  • News18
  • Last Updated: September 4, 2019, 8:50 PM IST
  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா தபால் மூலமாக நசரத் பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை ஒளிபரப்பாமல் மதுமிதாவை வெளியேற்றிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்றும் நிகழ்ச்சி குழு தெரிவித்தது.


ஆனால் அவர் வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தை சமூகவலைதளவாசிகள் வெளியிட்டனர். அதில், ஹலோ டாஸ்க்கின் போது மதுமிதா தெரிவித்த கருத்து கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாகவும், இதற்கு நடிகை ஷெரின் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் நடிகை வனிதா விஜயகுமார் வார இறுதியில் மக்களின் ஓட்டைப் பெற இப்படி எல்லாம் நடிக்க வேண்டும் என்று கூறியதாகவும், பெரும்பாலான போட்டியாளர்கள் தனக்கு எதிராக திரும்பியதால் தான் கூறிய கருத்தை நிரூபிக்க அவர் தன்னைத்தானே தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் அகம் டிவி வழியாக போட்டியாளர்களிடையே பேசிய மதுமிதா, “சேரன் மற்றும் கஸ்தூரியைத் தவிர வேறு யாரையும் பார்க்க விரும்பவில்லை” என்றார்.

Loading...

அப்போது சேரன், “மதுமிதா எடுத்த முடிவை தவறானது என்று சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து விஜய் டிவி நிர்வாகம் நடிகை மதுமிதா சம்பள பாக்கியை கேட்டு தற்கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகாரளித்தது.

இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த மதுமிதா தன் மீது விஜய் டிவி பொய்ப்புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் தற்போது விஜய் டிவி நிர்வாகம் மீது மதுமிதா நசரத் பேட்டை காவல்நிலையத்தில் தபால் மூலமாக புகார் அளித்துள்ளார். அதில், ஹலோ ஆப் டாஸ்க்கின் போது சக போட்டியாளர்கள் தன்னைக் கொடுமைப்படுத்தியதையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரைத் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, விஜய் டிவி நிர்வாகம் தனக்கு கொடுக்கவேண்டிய சம்பள பாக்கியை செலுத்திவிட்டதாகவும், ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடந்தவற்றை வெளியில் சொல்லக் கூடாது என்றும், பத்திரிகையாளர்களைச் சந்திக்கவிடாமல் முட்டுக்கட்டை போடுவதாகவும், இதை தனது புகாரில் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் விஜய் டிவியின் இந்த நடவடிக்கையால் மக்கள் தன்னைத் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.

வீடியோ பார்க்க: அஜித்தின் ரீமேக் படங்கள் ஒரு பார்வை!

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...