ரஜினியுடன் எஜமான் படத்தில் சேர்ந்து நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யாவின் சமீபத்திய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில் அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய் சங்கர், ரஜினி, கமல், சிவக்குமார், சரத்குமார் என மெகா ஸ்டார்களுடன் சேர்ந்து நடித்தவர் மூத்த நடிகை லட்சுமி. இவரின் மகள் நடிகை ஐஸ்வர்யா ’நியாயங்கள் ஜெயிக்கட்டும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். மீரா படத்தில் விக்ரமுடன் டூயட் பாடியவர், தொடர்ந்து மில் தொழிலாளி, தையல்கரான், ராசுகுட்டி போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்பு ரஜினியின் எஜமான் படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். இந்த படம் அவருக்கு மிகப் பெரிய பெயரை வாங்கி தந்தது.
இதையும் படிங்க.. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. ஷாக் கொடுத்த பிக் பாஸ் ஷெரின்!
தமிழ் மட்டுமில்லை கன்னடம், தெலுங்கிலும் நடிக்க தொடங்கினார். அதன் பின்பு அவரின் மார்க்கெட் குறைய சினிமாவில் இருந்து ஒதுங்கினார். சின்ன பிரேக் எடுத்துக் கொண்டவர் சில ஆண்டுகள் கழித்து எம். குமரன், ஆறு, சபரி போன்ற படங்களில் துணை நடிகையாக என்ட்ரி கொடுத்தார். ஆறு படத்தில் இவரின் ’சவுண்ட் சரோஜா’ கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. அதன் பின்பு சின்னத்திரை பக்கம் வந்தார். சன் டிவி, ஜெயா டிவியில் ஒளிப்பரப்பான சீரியல்களில் நடித்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஐஸ்வர்யா பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் தன்னுடைய நிலைமை பற்றியும், வாய்ப்பு கிடைக்காததால் சோப்பு விற்று வாழ்க்கையை கழிப்பதாக பல விஷயங்களை ஷேர் செய்துள்ளார். இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. மூத்த நடிகை லட்சுமியின் மகளுக்கு இப்படியொரு நிலையா? என சினிமா வட்டாரத்தில் இந்த விஷயம் பேசும் பொருளாக மாறியுள்ளது.
15 வருட உழைப்பு.. விஜய் டிவி அமுதவாணனுக்கு நடிகர் சத்யராஜ் கொடுத்த அங்கீகாரம்!
அந்த பேட்டியில் ஐஸ்வர்யா பகிர்ந்து கொண்டவை “ நடிக்க வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறேன், தற்போது வீடு வீடாக சென்று சோப்பு விற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது கூட கடன் இல்லை, வேறு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் வேலை இல்லை. இப்போது செய்கிற வேலையை எண்ணி நான் வருத்தப்படவில்லை. பெருமைப்படுகிறேன். எந்த வேலை இருந்தாலும் சொல்லுங்கள் நான் நிச்சயம் செய்து விட்டு அதற்கான ஊதியத்தை பெற்றுக் கொள்கிறேன். எந்த வேலையும் அவமானம் இல்லை. உழைத்து சாப்பிட வேண்டும் அதுதான் பெருமை. அதே போல் சினிமாவை காட்டிலும் சீரியல் தான் என்னை வாழ வைத்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kollywood, Rajinikanth, Tamil Cinema