• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சீரியலுக்கு மீண்டும் திரும்பும் நடிகை குஷ்பூ?

சீரியலுக்கு மீண்டும் திரும்பும் நடிகை குஷ்பூ?

குஷ்பு

குஷ்பு

நடிகை குஷ்பூ மீண்டும் சீரியலில் நடிக்கப்போவதாகவும், அந்த சீரியலை அவரே தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பூ, அண்மைக்காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். கதாநாயகியாக வலம் வந்த அவர், அதற்கான மார்கெட் குறைந்த பிறகு சின்னத்திரையில் கவனம் செலுத்த தொடங்கினார். சன்டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

இதற்கிடையே அரசியலிலும் பிரபலமாக இருந்த அவர், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை எதிர்த்து போட்டியிட்ட அவர் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டார். நட்சத்திர வேட்பாளராக பார்க்கப்பட்ட குஷ்பு வாக்கு எண்ணிக்கை முடிவில் தோல்வியை தழுவினார். தேர்தலுக்குப் பிறகு ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்து விலகியே இருந்தார்.அவ்வப்போது டிவிட்டரில் மட்டும் கருத்து தெரிவித்து வந்தார்.

Also Read : குக் வித் கோமாளி சீசன்-3ல் ரக்ஷனுக்கு ஜோடியாக வரப்போகும் ஆங்கர் யார் தெரியுமா?

அண்மையில், குடியரசுத் தலைவர் 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தபோது, அதனை விமர்சிக்கும் வகையில் டிவிட்டரில் கருத்து பதிவிட்டார். அந்தப் பதிவில் திறமையான பெண்கள் ஒருவர் கூட இல்லையா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதனால், அவர் பா.ஜ.கவில் இருந்து விலகப்போவதாகவும், அக்கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதேநேரத்தில் திமுகவில் மீண்டும் இணைய குஷ்பூ முயற்சி செய்வதாக மற்றொரு தகவலும் வேகமாக பரவியது.

பா.ஜ.கவில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் குஷ்பூ இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதனை மறுத்த குஷ்பூ, தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகனுக்கும் மனம்மார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து, தன்னைப் பற்றி வெளியான யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அரசியல் களத்தில் அவரைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி இட்டாலும், திரைத்துறையில் அவரைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Also Read : பாலாவை காதலிக்கிறேனா? குக் வித் கோமாளி ரித்திகா ஓபன் டாக்!

அதில், அவர் ஏற்கனவே நடத்தி வரும் அவ்னி சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் புதிய சீரியல் ஒன்று தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தயாரிக்கும் குஷ்பு, முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவரின் அவ்னி சினிமாஸ் தயாரித்த நாடகங்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது. அரசியல் களம் தற்போது ஓய்ந்திருப்பதால், மீண்டும் நடிப்புக்கு ரீ என்ட்ரி கொடுக்கிறாரோ? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், இந்த யூகங்களுக்கான பதில் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: