Khushbu Sundar: அடையாளம் தெரியாமல் மாறிப்போன குஷ்பு - அதிரடி எடைக்குறைப்பு ஃபோட்டோ!

குஷ்பு சுந்தர்

சிறிய இடைவெளிக்குப் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கோகுலத்தில் சீதை’ சீரியலில் டாக்டர் மங்களமாக நடித்து வருகிறார் குஷ்பு.

  • Share this:
    கொழு கொழுவென இருந்த நடிகை குஷ்பு தற்போது தனது உடல் எடையை சரமாரியாகக் குறைத்திருக்கிறார்.

    90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என அப்போதைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டவர். சினிமாவை தொடர்ந்து சின்னத்திரையில் கால் பதித்து, அங்கும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலில் மகாலட்சுமி தேவராஜ், நந்தினியில் பார்வதி/துர்கா அம்மன், கும்குமம் சாரு என சீரியல்களில் தனித்து விளங்கினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதோடு மானாட மயிலாட சீசன்கள் 3-5 மற்றும் 7-8, ஜோடி நம்பர் ஒன்-சீசன் 5 மற்றும் அழகிய தமிழ் மகன் ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் இணை ஜட்ஜாக இருந்தார். நிஜங்கள், கோடீஸ்வரி மற்றும் நம்ம வீட்டு மகாலட்சுமி, சிம்ப்ளி குஷ்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Kushboo Sundar (@khushsundar)






    இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கோகுலத்தில் சீதை’ சீரியலில் டாக்டர் மங்களமாக நடித்து வருகிறார். இதற்கிடையே தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் தனது உடல் எடையை சரமாரியாகக் குறைத்திருக்கிறார் குஷ்பு. அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ‘கடின உழைப்பின் இறுதி முடிவு’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: