பல நடிகர்களும் சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்கத் தொடங்கி, பின்பு திரைப்படம் வெப் சீரிஸ் என்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற்றம் அடைவார்கள். அந்த வரிசையில் கவினும் ஒருவர். விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் தொடர் மூலம் அறிமுகமாகி, சரவணன் மீனாட்சி சீரியலில் முதலில் வில்லனாக நடித்து, பின்னர் சரவணனாக மாறி தனக்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார். கவினுக்கு இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது.
அதற்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இதுவரை நடந்த அனைத்து சீசன்களிலுமே மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது, சக போட்டியாளரான லாஸ்லியாவுடனான காதல் பரபரப்பாகப் பேசப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஒரு பக்கம் ரசிகர் பட்டாளம் இவருக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், கடுமையாக விமர்சனமும் எதிர்ப்பும் இருந்தது. யாரும் எதிர்பாராத போல, 5 லட்சம் பரிசுப் பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். சிறிய இடைவெளிக்குப் பிறகு, லிஃப்ட் என்ற திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது. திரைப்படத்திலும் கவினின் நடிப்பு பாராட்டப்பட்டது.
அடுத்ததாக தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார் கவின். அந்த சீரியஸின் பெயர் ஆகாஷ்வாணி. இந்த வெப் சீரிஸ் ஆஹா தமிழ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த வெப் சீரிஸ் வெளியாகும் தளமான ‘ஆஹா’ தளத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.
Beast Arabic Kuthu: விஜய், பூஜா ஹெக்டேவின் தாறுமாறான ஆட்டத்தில் அரபிக் குத்து பாடல் வீடியோ!
OTT தளத்தின் துவக்க விழாவில் நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் குஷ்பு பேசிய போது, அவர் கவினைப் பற்றி மிகவும் பெருமையாக பேசினார். குஷ்புவின் இந்த பாராட்டிக் கேட்ட கவினுக்கு மிகப்பெரிய ஆச்சரியமும் சந்தோஷமும் ஏற்பட்டது. ‘கவின் இப்பொழுது ஒரு ஸ்டார் ஆகிவிட்டார்’ என்று குஷ்பு சொன்னதை கேட்ட கவின் பூரித்துப் போனார்.
Arabic Kuthu: 45 நிமிடத்தில் 1 மில்லியன் வியூஸ்... 5 மில்லியன் நிகழ்நேர பார்வைகள்... பட்டையைக் கிளப்பும் விஜய்யின் அரபிக் குத்து!
அதன் பிறகு தனது ட்விட்டர் அக்கவுண்டில் குஷ்புவுக்கு நன்றி தெரிவித்து ஒரு ட்வீட் செய்திருந்தார் கவின். நீங்கள் பேசியதை கேட்டு நான் இன்னும் அதிர்ச்சியில் தான் இருக்கிறேன் என்று குஷ்வை டாக் செய்து டிவீட் செய்திருந்தார். அதற்கு குஷ்பு ரீடிவீட் செய்து ‘ஆல் தி பெஸ்ட். ஆகாஷ்வாணி ரொம்ப அருமையாக வந்திருக்கிறது, உங்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்’ என்று வாழ்த்து சொல்லியிருந்தார்.
ஆஹா தமிழ் OTT தளத்தில் வெளியாகும் முதல் தமிழ் ஒரிஜினல் சீரிஸ் இது தான்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.