’கோகுலத்தில் சீதை’ சீரியலில் குஷ்பு - சின்னத்திரையில் ரீ என்ட்ரி

குஷ்பு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை சீரியலில் மங்களம் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை குஷ்பூ நடிக்க உள்ளார்.

 • Share this:
  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2019 ஆம் ஆண்டு முதல் கோகுலத்தில் சீதை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கதாநாயகனாக டான்ஸ் மாஸ்டராக இருந்த நந்தாவும், கதாநாயகியாக புதுமுக நடிகை ஆஷா கவுடாவும் நடித்து வருகின்றனர். வெள்ளித்திரையில் பிரபலமாக இருந்த நடிகைகள் நளினி, வடிவுக்கரசி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடருக்கு இன்னும் மவுசு சேர்க்கும் விதமாக நடிகை குஷ்பூ இணைந்துள்ளார். 90 களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அவர், கதாநாயகி அந்தஸ்துக்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்தார். பின்னர் சின்னத்திரையில் கால்பதித்த குஷ்பு, குங்குமம், கல்கி உள்ளிட்ட பல தொடர்களில் வரிசையாக நடித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   
  View this post on Instagram

   

  A post shared by zeetamil (@zeetamizh)


  அதேநேரத்தில் அரசியலிலும் பிரபலமாக இருந்தார். அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருக்கும் அவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கோகுலத்தில் சீதை’ நாடகத்தில் ‘மங்களம்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மருத்துவரான மங்களம், பொறுப்புள்ள, தைரியமான பெண்ணாக இருக்கிறார்.   
  View this post on Instagram

   

  A post shared by zeetamil (@zeetamizh)


  எந்த பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வை கொடுப்பவராக மங்களம் இருக்கிறார். கதைப்படி, கதாநாயகன் அர்ஜூனின் தாயான சுசித்திரா தனது மகனுக்கு இனியா என்ற ஒரு பெண்ணை பார்க்கிறார். அவரை சுசித்திராவுக்கும், அர்ஜூனுக்கும் பிடித்துப்போகிறது. இதனையடுத்து நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்து, அந்த நிகழ்வும் வெற்றிகரமாக முடிவடைகிறது. ஆனால், நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு மருமகள் தேர்வில் சுசித்திராவுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

  ஏனென்றால், வசுந்திரா என்ற பெண்ணும் அவளுக்கு பிடித்திருக்கிறது. இதனால் குழப்பத்தில் இருக்கும் சுசித்ரா, இருவரை யாரை தேர்வு செய்யலாம் என யோசித்துக்கொண்டிருக்கிறார். அப்போது, தனது தோழியான மங்களத்தின் உதவியை நாடுகிறார். இனியா, வசுந்திரா இருவரில் யாரை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாம்? மகனுக்கு இருவரில் யார் பொருத்தமாக இருப்பார்கள்? என தேர்வு செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறாள்.

  Also read... ’இதயத்தை திருடாதே’ சீரியலில் இணைந்த குட்டி பிரபலம்

  தோழியின் வேண்டுகோளுக்கு இணங்க அர்ஜூன், இனியா, வசுந்திரா ஆகிய மூவரையும் தன்னிடம் அனுப்பி வைக்குமாறு மங்களம் கேட்டுக் கொள்கிறாள். அவர் யாரை அர்ஜூனுக்கு பொருத்தமானவர் என தேர்வு செய்யப் போகிறார் என்பது கதையின் டிவிஸ்டாக இருக்கிறது. அடுத்தடுத்த எபிசோடுகளில் அர்ஜூனுக்கான பெண்ணை மங்களம் தேர்தெடுத்து கொடுக்க உள்ளார். இதற்கிடையே நடைபெறும் டிவிஸ்டுகள் என்ன என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மங்களமாக குஷ்புவின் நடிப்பையும் பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஜூலை 28 ஆம் தேதியான இன்று முதல் மங்களத்தின் ஆட்டம் தொடங்க உள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vinothini Aandisamy
  First published: