Bigg Boss 3: ஐயோ சாமி ஆளை வுடு... பிக் பாஸ் குறித்து கஸ்தூரியின் ட்வீட்!

அந்த 17-வது போட்டியாளர் யார் என்பது குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அது நடிகை கஸ்தூரியாக இருக்கும் என்று தகவல் பரவத் தொடங்கியது.

Web Desk | news18
Updated: July 26, 2019, 4:57 PM IST
Bigg Boss 3: ஐயோ சாமி ஆளை வுடு... பிக் பாஸ் குறித்து கஸ்தூரியின் ட்வீட்!
கஸ்தூரி
Web Desk | news18
Updated: July 26, 2019, 4:57 PM IST
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த ஜுன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி தற்போது 30 நாட்களைக் கடந்துள்ளது.

இரண்டாவது வார இறுதியில் பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் நபராக வெளியேற்றப்பட்டார் பாத்திமா பாபு. அவரைத் தொடர்ந்து நடிகை வனிதா விஜயகுமாரும், மோகன் வைத்யாவும் வெளியேற்றப்பட்டனர்.


வரும் ஞாயிறு எந்த போட்டியாளர் வெளியேற்றப்படுவார், என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

மேலும், இந்தமுறை பிக் பாஸ் போட்டியில் மொத்தம் 17 பேர் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை 16 பேர் மட்டுமே போட்டியாளர்களாக வீட்டுக்குள் சென்றுள்ளார்கள். இன்னும் ஒரு போட்டியாளர் உள்ளே அனுப்பப்படுவார் என்று தெரிகிறது.

அந்த 17-வது போட்டியாளர் யார் என்பது குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அது நடிகை கஸ்தூரியாக இருக்கும் என்று தகவல் பரவத் தொடங்கியது.

Loading...




இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ABSOLUTELY UNBEARABLE TO WATCH ! மூணு வருஷமா கேட்குறாங்களே இந்த வருஷம் போகலாம்ன்னுட்டுதான் கொஞ்சம் பார்த்துட்டு வர்றேன். ஆனா நேத்து எபிசொட் பார்த்தப்புறம் "ஐயோ சாமி ஆளை வுடு " என்ற feeling தான் வருது. மாட்டிட்டு அவஸ்தைப்படுறவருக்கு பாவம் என்ன கட்டாயமோ? என்றும் அவர் கூறியிருந்தார்.

Also see...

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...