’இவ்வளவு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை’ - இப்போது ஃபீல் பண்ணும் சீரியல் நடிகை!

ஜெனிபர்

ஜெனிஃபர் விலகியதையடுத்து ரேஷ்மா தற்போது ராதிகா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

  • Share this:
விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் ஒன்று ’பாக்கியலட்சுமி’. இந்த சீரியலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பாக்கியலட்சுமி, கணவன் கோபிநாத் மற்றும் மாமியார் ஆகியோரால் அவமதிக்கப்படுகிறாள். அதனை பொருட்படுத்தாமல் எல்லாவற்றையும் அனுசரித்து செல்லும் குடும்ப பெண்ணாக இருக்கிறாள். ஆனால், அவளின் கணவன் கோபிநாத்துக்கு முன்னாள் காதலி ’ராதிகா’ மீதான மோகம் கல்யாணத்துக்குப் பிறகும் குறையவில்லை.

தனக்கு கல்யாணமான விஷயத்தை ராதிகாவிடம் தெரிவிக்காமலேயே அவளுடன் தொடர்ந்து பழகிக்கொண்டிருகிறான். ராதிகாவும், பாக்யாவும் ஏற்கனவே நண்பர்களாக இருந்தவர்கள். இந்த விஷயம் கோபிக்கு தெரியவரும்போது, இருவரையும் ஒரே நேரத்தில் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டே வருகிறான். பாக்யாவின் கணவர் கோபி என்பதும் ராதிகாவுக்கு தெரியாது. பரபரப்பாக போய்க்கொண்டிருந்த இந்த சீரியலில் ராதிகாவாக நடித்த ஜெனிஃபர், திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் ஏன் சீரியலில் இருந்து விலகினார் என ரசிகர்களுக்கு தெரியவில்லை. இது குறித்து சமூகவலைதளங்களில் அவரிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார்கள். ரசிகர்களின் கேள்விக்கு விளக்கம் கொடுத்த ஜெனிஃபர், முதலில் ராதிகா கதாப்பாத்திரம் மிகவும் அமைதியானவள் என்கிற ரீதியில் சொல்லப்பட்டது. ஆனால், கதை பயணிக்கும்போது திடீரென நெகடிவாக காண்பிக்கத் தொடங்கினார்கள். இனி வரும் காலங்களில் ராதிகா கதாப்பாத்திரம் வில்லியாக மாற இருப்பதால், அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் சீரியலில் இருந்து விலகிவிட்டேன் எனக் கூறினார்.

ஜெனிஃபர் விலகியதையடுத்து ரேஷ்மா தற்போது ராதிகா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சீரியலில் இருந்து விலகியபோது தனக்கு வந்த மெசேஜ்கள் குறித்து ஜெனிஃபர் தற்போது மனம் திறந்துள்ளார். "பாக்கியலட்சுமி சீரியலில் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ராதிகா கதாப்பாத்திரத்துக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. சீரியலில் இருந்து விலகிவிட்டேன் என தெரிந்ததும், ஒரு லட்சத்துக்கும் மேலான மெசேஜ்ஜூகள் எனக்கு குவிந்தது.

Also read... பாரதி கண்ணம்மாவில் இருந்து வெளியேற ’வெண்பா’ முடிவு - தடைபோட்டவர் யார் தெரியுமா?

அந்த மெசேஜ்களை படிக்கும்போது தான் தெரிந்து கொண்டேன், நான் நடித்த கதாப்பாத்திரத்துக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது என புரிந்து கொண்டேன். சிலர், நான் விலகியதால் இனிமேல் சீரியல் பார்க்க மாட்டேன் என்றெல்லாம் கூறியிருந்தார்கள். நான் நன்றாக நடித்ததாகவும், தொடர்ந்து ராதிகாவாக நடிக்குமாறு கூறியிருந்தனர். ரசிகர்கள் பலர் என்னுடைய விலகலுக்கு கண்ணீரெல்லாம் விட்டனர் என கேள்விபட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நெகடிவ் ரோலில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. நல்ல கதையம்சம் உள்ள தொடரில் நல்ல கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது மட்டுமே ஆசை. அந்த மாதிரியான சீரியல்களை தேர்வு செய்து, தொடர்ந்து நடிப்பேன். ரசிகர்கள் காட்டிய அன்புக்கு மிக்க நன்றி" என உணர்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: