Home /News /entertainment /

வேலையில்லாத சினேகன் என் பெயரை வைத்து விளம்பரம் தேடுகிறார் - நடிகை ஜெயலட்சுமி

வேலையில்லாத சினேகன் என் பெயரை வைத்து விளம்பரம் தேடுகிறார் - நடிகை ஜெயலட்சுமி

சினேகன் - ஜெயலட்சுமி

சினேகன் - ஜெயலட்சுமி

பிக் பாஸ் முடிந்து வேலையில்லாமல் இருக்கும் சினேகன், மக்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என விளம்பரத்துக்காக இப்படி செய்தது போல் தெரிகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பாடலாசிரியர் சினேகன் தன்னை தவறாக சித்தரிப்பதாக சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். 

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும், பாடலாசிரியருமான சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது தொண்டு நிறுவன பெயரை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டதாக சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குறிப்பிட்டிருந்தார்.

    சினேகம் பவுண்டேஷன் என்ற பெயரில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தான் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும், அந்த பெயரை பயன்படுத்தி பாஜக பிரமுகரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி பணமோசடியில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    இந்நிலையில் தற்போது சினேகனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, “சினேகன் என் மீது நிறைய பொய்யான குற்றச்சாட்டுகளை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அவரோட பேரை பயன்படுத்தி என்னோட சினேகம் அறக்கட்டளை வழியாக நான் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையிலேயே சினேகன், சினேகம் அறக்கட்டளை என்ற ஒன்றை வைத்திருப்பதை அவர் பிரஸ் மீட்டுக்குப் பிறகு, ஒரு சிலர் எனக்கு ஃபோன் செய்து சொன்னதும் தான் எனக்கே தெரிய வந்தது.

    கணவர் வித்யாசாகர் இழப்பிலிருந்து மீண்ட மீனா!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன் பிறகு அவருடைய சமூக வலைதள பக்கங்களுக்கு சென்று பார்த்தேன். அதில் அவர் சினேகம் அறக்கட்டளை நடத்தி வருவதற்கான எந்த அடையாளமும் இல்லை. சினேகன் பேரை வச்சு நான் ஏன் மோசடி செய்யணும். எனக்கு அனுப்பின நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டதாகவும், ஃபோன் செய்த போது நான் காஃபி குடிக்க அழைத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அவர் பக்கத்திலிருந்து எனக்கு நோட்டீஸோ, அழைப்போ வரவில்லை. இப்படி பொய்யான வழக்கை பதிவிட்டு என்னை தவறாக சித்தரித்திருக்கிறார். பிக் பாஸ் முடிந்து வேலையில்லாமல் இருக்கும் சினேகன், மக்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என விளம்பரத்துக்காக இப்படி செய்தது போல் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    அடுத்த செய்தி