Home /News /entertainment /

என்னாது! கலர்ஸ் தமிழில் மறுஒளிபரப்பாகும் தென்றல் சீரியலில் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளாரா?

என்னாது! கலர்ஸ் தமிழில் மறுஒளிபரப்பாகும் தென்றல் சீரியலில் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளாரா?

தென்றல் சீரியல்

தென்றல் சீரியல்

Iswarya Menon : நடிகை ஐஸ்வர்யா மேனன கலர்ஸ் தமிழில் மறுஒளிபரப்பாகும் தென்றல் சீரியலில் நடித்துள்ளார்.

    சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், திருமதி செல்வம் ஆகிய சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அசைக்க முடியாத வரவேற்பை பெற்றது.  2009-2015 வரை ஒளிப்பரப்பான தென்றல் சீரியலில் ஸ்ருதி கதாநாயகியாகவும்,  தீபக் கதாநாயகனாகவும் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கொரோனா காலத்தில் நன்கு வரவேற்பு பெற்ற சீரியல்களை  முன்னணி தொலைக்காட்சிகள் மறுஒளிபரப்பு செய்தனர். அந்த வகையில் தற்போது தென்றல் சீரியலை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி மறுஒளிபரப்பு செய்து வருகிறது.

    இந்த தென்றல் சீரியலில் தற்போது இளைஞர்களின் ஃபேவரெட் க்ரஷ் மற்றும் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒருவர் ‘ஸ்ருதி’என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஆம். தென்றல் சீரியலில் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்.



    அப்போது தென்றல் சீரியலை பார்த்தவர்கள்  இந்த பெண் பிற்காலத்தில் ஒரு ஃபேமஸ் நடிகையாக மாறுவார் என்று நினைத்திருக்க கூட மாட்டார்கள்.இப்பொழுது இந்த சீரியல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா மேனன் சீரியலில் வரும் காட்சிகளை பார்க்க விரும்புபவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் காணலாம்.

    இதையும் படிங்க : இது தப்பே இல்ல! ஆண்ட்ரியா பகிர்ந்த அந்த புகைப்படம்..

    ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதுப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் இந்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை பெற்று தரவில்லை.இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். ஐஸ்வர்யா மேனன் தமிழ் படம் 2 மூலம் பிரபலமானார். அதையடுத்து ஹிப்ஹாப் தமிழா உடன் இணைந்து நடித்த ‘நான் சிரித்தால்’ படம் மூலம் ஐஸ்வர்யா மேனனுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உருவாகினார்கள்.

    ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படம் மற்றும் ஜிம் வொர்க் அவுட் வீடியோவிற்கும் ஒரு தனி ஃபேன் பேஸ் இருக்கிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by ISWARYA MENON (@iswarya.menon)





    தற்போது ஐஸ்வர்யா மேனன் தெலுங்கில் இரண்டு படங்களில் கமீட் ஆகியுள்ளார். தமிழில் வேலம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி