சன் தொலைக்காட்சியில் பிரபலமான கண்ணான கண்ணே சீரியலில் நடிகை இனியா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளித்திரையில் வெற்றிகரமாக வலம் வரும் நடிகைகள் சின்னத்திரையில் காலூன்றும் விஷயத்தை சன் தொலைக்காட்சி தான் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தது. தங்கவேட்டை ஷோ மற்றும் தங்கம் சீரியல் மூலமாக ரம்யா கிருஷ்ணன், லஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலில் குஷ்பு, சித்தியில் ஆரம்பித்து அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, அரசி, செல்வி, சித்தி 2 என பல சீரியல்களில் ராதிகா, ‘கோலங்கள்’ சீரியலில் தேவையானி என பலரும் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்துள்ளனர்.
தற்போது வரையிலும் சன் டி.வி.யின் பல தொடர்களிலும் வெள்ளித்திரையைச் சேர்ந்த பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். விபத்துக்கு முன்னதாக யாஷிகா ஆனந்த் கூட சன் டி.வி.க்கு நம்பர் 1 டிஆர்பி ரேட்டிங் கொடுத்து வரும் ‘ரோஜா’ சீரியலில் நடித்தார். தற்போது சன் டி.வி.யின் மற்றொரு பிரபலமான தொடரில் தமிழ்,தெலுங்கு,
மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் இனியா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சன் டி.வி.யின் ப்ரைம் டைம்
சீரியலான “கண்ணான கண்ணே” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 ஒளிபரப்பப்படுகிறது. இந்த சீரியல் தெலுங்கில் வெளியான 'பௌர்ணமி' மற்றும் கன்னடத்தில் ஒளிபரப்பான 'மானசரே' போன்ற தொடர்களின் கதைக்கருவை மையமாக வைத்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது ஆகும்.

இனியா
நிமேஷிகா, ராகுல் ரவி, பிரித்திவிராஜ், லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் கெளதம் என்ற தந்தை கதாபாத்திரத்தில் பிரித்திவிராஜ் நடிக்க, அவரின் மகளாக புதுமுக நடிகை நிமிக்ஷிதா மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ராகுல் ரவி என்பவர் 'யுவா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த சீரியலில் சிறப்பு தோற்றமாக இனியா இருந்து வருகிறார். கதைப்படி பிரித்திவிராஜின் மறைந்த மனைவியாக இனியா உள்ளார்.
குக் வித் கோமாளி புகழை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த பிரபல கிரிக்கெட் வீரர்!
இனியா பிரசவத்தின் போது உயிரிழந்து விட்டதால், போட்டோ பிரேமாக மட்டுமே சீரியல் முழுவதும் காண்பிக்கப்பட்டு வருகிறார். இதற்காக சீரியலின் அனைத்து காட்சிகளும் கவர் ஆகும் படி மிகப்பெரிய போட்டோ ப்ரேம் வீட்டின் நடுவில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை போட்டோவாக மட்டுமே இருந்த இனியா, விரைவில் திரையில் தோன்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளாஷ்பேக் காட்சிகளில் இனியா நடிக்க உள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு மற்றும் ஒளிபரப்பு விரைவில் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - படங்கள்
இனியாவின் மறைவிற்கு பிறகு அவர் பெற்ற பிள்ளையான மீராவுக்கும், மனைவியை பிரசவத்தில் பறிகொடுத்த பிரித்திவிராஜுக்கும் இடையிலான பாசப்போராட்டமே கண்ணான கண்ணே சீரியலின் கதைக்கரு என்பதால், இனியா தோன்ற உள்ள பிளாஷ்பேக் காட்சிகளை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்க
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.