கணவருடன் போட்டோஷூட்... படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம் - கர்ப்பகாலத்தை என்ஜாய் செய்யும் நடிகை ஃபரினா!

பரீனா

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஃபரினா, போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து தனது பேஜில் ஷேர் செய்து வருகிறார்.

  • Share this:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல பிரபலமான சீரியல்களில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி-யில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிபிரியனும், பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் வெண்பா கதாபாத்திரத்தில் ஃபரினாவும் நடித்து வருகின்றனர். இந்த கதையில் கண்ணம்மாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு வெண்பா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறது. அதிலும் வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் வியக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். இதற்கு முன் இவர் சில சீரியல்கள் நடித்தாலும் பாரதி கண்ணம்மா தான் பெரிய ரீச் கொடுத்தது என்றே கூறலாம்.

இந்த சீரியலில் பாரதியை எப்படியாவது திருமணம் செய்தே தீரவேண்டும் என்ற ஆசையில், பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே களங்கத்தை மூட்டி விடுவதில் இருந்து அதற்கு இடையூறாக யார் வந்தாலும் அதை தடுப்பது வரை அனைத்து வேலைகளையும் பார்க்கும் கொடூர கதாபாத்திரத்தில் செமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதனிடையே ஃபரினா கர்ப்பமாக இருக்கும் தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஃபரினா, போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து தனது பேஜில் ஷேர் செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது முதல்முறையாக கணவருடன் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதில் தனது வயிற்றை பிடித்தவாறு போஸ் கொடுத்துள்ள ஃபரினா அழகாக இருக்கிறார். இந்த போட்டோஷூட் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக ஷேர் செய்துள்ளார்.

அண்மையில் சிவப்பு நிற உடை அணிந்து நீச்சல் குளத்தில் தண்ணீருக்கு அடியில் இருந்தவாறு வயிறு தெரியும் வகையில் போட்டோ ஷுட் நடத்தினார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஃபரினா ஷேர் செய்திருந்த நிலையில், இதுவரை 4.95 லட்சம் பேர் பார்த்துள்ளனர். கர்ப்பமாக இருப்பதால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ஃபரினா விலகுவதாக வதந்திகள் வெளிவந்தது. இதற்கு பதிலளித்த ஃபரினா, நான் தற்போது சீரியலில் இருந்தும் விலகும் முடிவில் இல்லை, எனக்கு நடிப்பதில் தற்போதும் எவ்வித பிரச்னையும் இல்லை என விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் தம்பி கதாபாத்திரமான அகில் தற்போது சீரியலில் இருந்து விலகுவதாகவும், அவருக்கு பதில் வேறொருவர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாரதி கண்ணம்மா சீரியலில் அகில் மனைவியும், கண்ணம்மாவின் தங்கை கதாபாத்திரத்தில் அஞ்சலியாக நடிப்பவர் தற்போது சீரியலில் கர்ப்பமாக உள்ளார்.

Bharathi Kannamma Venba Farina Azad dance for Vijay song during pregnancy, Bharathi Kannamma venba, Bharathi Kannamma Farina Azad photo, bharathi kannamma, bharathi kannamma today episode, bharathi kannamma live streaming, Vijay TV Bharathi Kannamma Serial, baharathi kannamma Latest Update, bharathi kannamma hotstar, பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ, Bharathi Kannamma venba pregnant, Bharathi Kannamma venba pregnancy photo, பாரதி கண்ணம்மா வெண்பா கர்ப்பகால புகைப்படம், bharathi kannamma venba pregnancy dance, venba pregnancy dance, farina azad pregnancy dance, bharathi kannamma anjali, bharathi kannamma kanmani manoharan, bharathi kannamma today episode, விஜய் பாடலுக்கு பாரதி கண்ணம்மா வெண்பா டான்ஸ்
வெண்பா - அஞ்சலி


Also read... வெற்றிகரமாக 700 எபிசோட்களை கடந்த இதயத்தை திருடாதே சீரியல் - ரசிகர்களுக்கு நன்றி!

அவருக்கு வளைகாப்பு நடக்கும் காட்சிகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் அஞ்சலியுடன் ஃபரினா, டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றையும் ஃபரினா தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவை 1.50 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published: