• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Dharsha Gupta: தர்ஷா குப்தாவிற்கு பர்த் டே சர்ப்ரைஸ் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய குடும்பம்!

Dharsha Gupta: தர்ஷா குப்தாவிற்கு பர்த் டே சர்ப்ரைஸ் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய குடும்பம்!

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

மவுனிகா தேவி மற்றும் அம்ருத் கலாம் ஆகியோருடன் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான அவளும் நானும் தொடரில் அறிமுகமானார்

  • Share this:
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த நடிகை தர்ஷா குப்தா, சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். கடந்த 1994-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி கோவையில் பிறந்த இவர் கொரோனா தொற்றுக்கு மத்தியில் அமைதியான முறையில் இரு நாட்களுக்கு முன் தனது 27-வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். கோவையில் பிறந்திருந்தாலும் தர்ஷா குப்தா கேரளாவின் பாலக்காட்டில் வளர்ந்தார்.

தனது பள்ளி மற்றும் கல்லூரி பருவத்திலேயே மாடலிங் துறையில் நுழைந்துள்ளார். மாடலிங் செய்த போதும் இவருக்கு நடிப்பின் மீது தான் பெரும் ஆர்வம் இருந்தது. மிகச் சிறிய வயதிலேயே நடிப்பதில் விருப்பம் கொண்டிருந்தார் இவர்.  எப்போதும் ஒரு நடிகையாக மாறவே இவர் விரும்பினார். நடிப்பின் மீது இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது. மவுனிகா தேவி மற்றும் அம்ருத் கலாம் ஆகியோருடன் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான அவளும் நானும் தொடரில் அறிமுகமானார்.

பின்னர் ஜீ தமிழின் முள்ளும் மலரும் சீரியலில் முனிஷ் ராஜனுடன் விஜி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பெற்றார். பின்னர் சன் டிவி-யில் ஒளிபரப்பான மின்னலே சீரியலில் வர்ஷா என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடித்தார். விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி சீசன் 2-வில் பவித்ரா, அஸ்வின், மதுரை முத்து, தீபா, கனி, பாபா பாஸ்கர், ஷகிலா உள்ளிட்டோருடன் இணைந்து பங்கேற்ற நடிகை தர்ஷா குப்தா ரசிகர்களின் கவனம் பெற்றார். மேலும் விஜய் டிவி-யில் தற்போது ஒளிபரப்பாகி வரும் செந்தூர பூவே சீரியலில் நடிகர் ரஞ்சித், திரவியம் ராஜகுமாரன் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோருடன் இணைந்து முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர் விரைவில் வெள்ளித்திரையிலும் தோன்ற உள்ளார். திரெளபதி பட இயக்குனர் மோகனின் அடுத்த திரைப்படமான ருத்ர தாண்டவத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷியுடன் இணைந்து நடிக்கிறர் தர்ஷா குப்தா. இந்நிலையில் படப்பிடிப்பு ஒன்றில் பிஸியாக இருந்த தர்ஷா குப்தாவிற்கு அவரது குடும்பத்தினர் பிறந்தநாள் சர்ப்ரைஸாக கேக் ஒன்றை அனுப்பி இருந்தனர். தனது குடும்பத்தினர் அனுப்பிய எதிர்பாராத பிறந்தநாள் கேக் மூலம் அமைதியான பிறந்தநாள் கொண்டாட்டத்தை அனுபவித்த தர்ஷா குப்தா, இது தொடர்பான போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து, "நான் எதிர்பார்க்காத எனது குடும்பத்தினரின் நள்ளிரவு பிறந்தநாள் பரிசு. அன்பும் வாழ்த்துக்களும் கூறிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Dharsha (@dharshagupta)






அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களான ரித்திகா தமிழ்செல்வி, அர்ச்சனா குமார் மற்றும் பலரின் வாழ்த்து வெள்ளத்தில் மூழ்கினார் தர்ஷா. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் தர்ஷா. லாக்டவுன் நேரத்தில் முன்களபணியாளர்கள், தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்தினார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: