மே 16 முதல் கலர்ஸ் டிவி தமிழ் சேனலில் மறுஒளிபரப்பாகும் 'கோலங்கள்' சீரியல்.!
மே 16 முதல் கலர்ஸ் டிவி தமிழ் சேனலில் மறுஒளிபரப்பாகும் 'கோலங்கள்' சீரியல்.!
Kolangal
Kolangal Serial | கோலங்கள் சீரியலில் நடித்ததற்காக நடிகை தேவயானிக்கு 2003 ஆம் ஆண்டு மற்றும் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகை என்கிற விருதுகளும், உடன் நடித்த தீபா வெங்கட்டுக்கு 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த தோழிக்கான விருதும் மற்றும் அஜய் கபூர் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லனுக்கான விருதும் வென்றனர் என்பதும் இங்கே குறிப்பிடதக்கது.
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே 1,000 எபிசோட்களை கடந்த முதல் தொடர் சன் டிவியில் ஒளிபரப்பான 'கோலங்கள்' சீரியல் ஆகும். இது கடந்த 2003 ஆம் ஆண்டு 24 நவம்பர் ஆம் தேதி முதல் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி வரை மொத்தம் 1,533 எபிசோட்களுடன் நிறைவடைந்த இந்த ப்ரைம் டைம் சீரியலுக்கு இன்றுவரை ஏராளமான ரசிகர்கள் உண்டு.
ஏதாவது ஒரு 10 டிவி சீரியல்களின் பெயரை செல்லுங்கள் என்று கேட்டாலும் சரி, உங்களுக்கு பிடித்த டிவி சீரியல்களின் பெயர்களை சொல்லுங்கள் என்று கேட்டாலும் சரி, அந்த இரண்டு பட்டியல்களிலுமே கோலங்கள் சீரியல் இடம்பெறும். அந்த அளவிற்கு தமிழ் மக்களால், டிவி சீரியல் ரசிகர்கள் விரும்பப்பட்ட இந்த தொடரில் தேவயானி, தீபா வெங்கட், திருச்செல்வம், அஜய் கபூர், பூர்ணிமா இந்திரஜித், மோகன் ஷர்மா, சத்ய பிரியா, அபிஷேக் சங்கர், சுபலேகா சுதாகர், நளினி, வனிதா கிருஷ்ணச்சந்திரன், ஸ்ரீவித்யா மோகன், மஞ்சரி வினோதினி, குயிலி, பாம்பே ஞானம், துவாரகிஷ் ஜிரி என ஒரு நடிகர் - நடிகையர் பட்டாளமே நடித்து உள்ளனர்.
கோலங்கள் சீரியலில் நடித்ததற்காக நடிகை தேவயானிக்கு 2003 ஆம் ஆண்டு மற்றும் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகை என்கிற விருதுகளும், உடன் நடித்த தீபா வெங்கட்டுக்கு 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த தோழிக்கான விருதும் மற்றும் அஜய் கபூர் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லனுக்கான விருதும் வென்றனர் என்பதும் இங்கே குறிப்பிடதக்கது.
மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட சீரியல்களில் ஒன்று என்பதால், 15 வருட இடைவெளிக்குப் பிறகு, கோலங்கள் சீரியல் ஆனது கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் விகடன் ப்ரைம் டைம் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகத் தொடங்கியது. தற்போது வருகிற மே 16 ஆம் தேதி முதல் கோலங்கள் சீரியல் ஆனது மீண்டும் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் இந்த மறுஒளிபரப்பானது நீங்கள் நினைப்பது போல சன் டிவி வழியாகவே நடக்க போவதில்லை; மாறாக இது கலர்ஸ் டிவி தமிழ் சேனல் வழியாக நடக்க உள்ளது.
நம்ம மனசுல நீங்காம இடம் பிடித்த, நம்ம மனசுக்கு பிடிச்ச சீரியல் வந்துவிட்டது
வரும் மே 16 முதல், #Kolangal - மதியம் 1 மணிக்கு #Thendral - மதியம் 2 மணிக்கு
ஆம்! கோலங்கள் சீரியல் ஆனது மேற்குறிப்பிட்ட தேதியில் இருந்து மதியம் 1 மணிக்கு கலர்ஸ் டிவி தமிழ் சேனலில் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. கோலங்கள் சீரியலின் இந்த ரீடெலிகாஸ்ட் விடயத்தை கேள்விப்பட்ட பெரும்பாலான டிவி சீரியல் ரசிகர்களும் செம்ம குஷியில் உள்ளனர். மேலும், சிலர் மதியம் 1 மணி ஸ்லாட் ஆனது கோலங்கள் போன்ற ஒரு சீரியலுக்கான சரியான நேரம் அல்ல; நேரத்தை மாற்றுங்கள் என்று கூறிய வண்ணம் உள்ளனர். இன்னும் சிலரோ கோலங்கள் சீரியல் வேண்டாம் நாதஸ்வரம் சீரியலை ரீடெலிகாஸ்ட் செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
Published by:Selvi M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.