கணவருடன் சேர்ந்து மாடர்ன் டிரெஸ்ஸில் கலக்கும் குக் வித் கோமாளி புகழ் நடிகை தீபா!

தீபா மற்றும் அவரது கணவர் சங்கர்

தற்போது ஒளிபரப்பில் உள்ள Mr & Mrs சின்னத்திரை சீசன் 3-யில் தீபாவும் அவரது சங்கரும் புதிய கெட்டப்பில் இருக்கிறன்றனர். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை தீபா, சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து கொண்ட போட்டோக்களை ஷேர் செய்து இருக்கிறார்.

  • Share this:
சின்னத்திரை ரசிகர்களுக்கு நடிகை தீபா சங்கரை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் சின்னதிரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரது வெகுளித்தனம் கலந்த நகைச்சுவை பேச்சை ரசிக்காதவர்களே இல்லை எனலாம். வெள்ளித்திரையில் வெளியான நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கத்தில் அவரின் அக்காவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை பெரிதும் ஈர்த்தார். மேலும் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளார் நடிகை தீபா சங்கர்.

வெள்ளித்திரை மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்துள்ளது சின்னத்திரை தான். குறிப்பாக லட்சக்கணக்காக ஆடியன்ஸை கொண்ட ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான மற்றும் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு ஷோக்களில் பங்கேற்றதன் மூலம் நடிகை தீபா சங்கருக்கு ரசிகர்கள் பெருகி உள்ளனர். ரசிகர்களின் பேராதரவை பெற்ற சமையல் மற்றும் நகைச்சுவை கலந்த சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான் குக் வித் கோமாளியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறு வயதிலிருந்தே சீரியல்களில் தீபா நடித்து வரும் விஷயம் ஒரு சிலருக்கே தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருந்த தீபா சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து இருக்கிறார். திருமண வாழ்க்கைக்கு பிறகு சில காலம் தொழில் வாழ்க்கையை விட்டு ஒதுங்கி இருந்தார். இவர்க்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருகட்டத்தில் மீண்டும் மீடியா பக்கம் செல்ல விரும்பிய தீபாவிற்கு சீரியல் வாய்ப்புகள் வந்தன.

Also read... நடிகர் விமல் புகார் - தயாரிப்பாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு!

ஒரு சில சீரியல்களில் நடித்தாலும் திறமையாக நடித்து பெயர் வாங்கினார். அவ்வப்போது சில முன்னணி படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். இவரது திரை வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது குக் வித் கோமாளி சீசன் 2 தான். இதில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சயமானார். ஸ்டார் விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சியான "காமெடி ராஜா கலக்கல் ராணி", Mr & Mrs சின்னத்திரை உள்ளிட்ட ஷோக்கள் மூலம் தனது திறமையை மேலும் நிரூபித்தார் நடிகை தீபா சங்கர். 
View this post on Instagram

 

A post shared by Deepa (@actressdeepaofficial)


தற்போது ஒளிபரப்பில் உள்ள Mr & Mrs சின்னத்திரை சீசன் 3-யில் தீபாவும் அவரது சங்கரும் புதிய கெட்டப்பில் இருக்கிறன்றனர். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை தீபா, சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து கொண்ட போட்டோக்களை ஷேர் செய்து இருக்கிறார். அந்த போட்டோக்களில் நடிகை தீபா மற்றும் அவரது கணவர் இருவரும் மாடர்ன் டிரெஸ்ஸில் கலக்கல் தோற்றத்தில் இருக்கின்றனர். மாடர்ன் உடையில் இருக்கும் நடிகை தீபாவின் போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published: