கவலைகளை மறந்து மனம் விட்டும் சிரிக்கும் நிகழ்ச்சியாக விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மாறியிருக்கிறது. முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கும் புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில் திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளன. ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் அருண் விஜய், சந்தானம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சீரியல் நடிகை தர்ஷா குப்தா ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்கும் ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இத்திரைப்படத்தை திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி இயக்குகிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்ட இவர் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம் மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த தர்ஷா குப்தா, கண்டிப்பாக வருவேன். ஆனால் எப்போது வருவேன் என தெரியவில்லை. சமைக்கிறேனோ இல்லையோ பழைய நண்பர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே வருவேன்” எனத் தெரிவித்துள்ளார்.