Home /News /entertainment /

பர்சனல் வாழ்க்கை பற்றி கேட்ட நெட்டிசன்களின் கேள்விக்கு பதிலடி கொடுத்த நடிகை சாந்தினி!

பர்சனல் வாழ்க்கை பற்றி கேட்ட நெட்டிசன்களின் கேள்விக்கு பதிலடி கொடுத்த நடிகை சாந்தினி!

நடிகை சாந்தினி

நடிகை சாந்தினி

Actress Chandini : தனது கணவர் பற்றிய கேள்விக்கு பதிலடி கொடுத்த சாந்தினி..

சினிமா பிரபலங்கள் என்றாலே பலவித சர்ச்சைகளும், பிரச்னைகளும் அவர்களை சூழ்ந்து இருக்கும். இதற்கு பல காரணிகள் உள்ளன. பொதுவாகவே பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அவர்களின் ரசிகர்கள் வெளிப்படையாக தெரிந்து கொள்ள முற்படும்போது இது போன்ற சிக்கல்கள் அதிகம் எழும். சினிமா துறையில் உள்ளவர்கள் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை வைத்து அவர்கள் இப்படி தான் இருப்பார்கள், அவர்களின் வாழ்க்கை இப்படி தான் இருக்கும் என்பன போன்ற பல கற்பனைகளை உருவாக்கி கொள்வோம்.

ஆனால், உண்மையில் அவர்கள் அதுபோன்று இருப்பதில்லை. சாதாரண மனிதர்களை போன்றே அவர்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. சினிமாவில் நடிக்கிறார்கள் என்பதற்காக அவர்களின் அந்தரங்க விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தேவையற்ற ஒன்று. இது போன்ற ஒரு நிகழ்வு தான் சீரியல் நடிகை சாந்தினி அவர்களுக்கும் நிகழ்ந்துள்ளது. சித்து +2 என்கிற திரைப்படத்தில் சாந்தனு ஜோடியாக நடித்தவர் தான் சாந்தினி. இவர் சினிமாவில் இந்த திரைப்படம் மூலம் அறிமுகமானார்.



அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இருப்பினும் அந்த அளவிற்கு இவருக்கென்று தனி அங்கீகாரம் திரைப்படங்களில் கிடைக்காததால், தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். இதன் மூலம் ஓரளவு தனது கேரியரை மேலே கொண்டு வந்துள்ளார். இவர் தனக்கென்று வைத்துள்ள சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பார். அதே போன்று பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

also read : ‘நிஜத்தில் நான் இப்படித்தான்’- மனம் திறந்த சுந்தரி



இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் படங்களை பதிவிட்டார். இவை மிகவும் கிளாமரான படங்களாக உள்ளதால் பலரும் இது குறித்த கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர். குறிப்பாக இவர் சீரியலில் ஹோம்லியாக நடிப்பதாகும், போட்டோஷூட்டிற்கு இது போன்று கிளாமராக போஸ் தருவதாகவும் கூறி உள்ளனர். இது போன்ற கமெண்ட்களுக்கு சாந்தினி மிக கூலாக பதில் தந்துள்ளார். தான் இதற்கு முன்பே இது போன்று கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளதாகவும், தற்போது சீரியல்களில் நடிப்பதால் இந்த போட்டோ பற்றி பலரும் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது சாதாரண ஒரு போட்டோஷூட் தான், இதற்காக இந்த அளவிற்கு ரியாக்ட் செய்ய வேண்டியதில்லை என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

also read : நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரல்..



also read : கலர்ஸ் தமிழில் மறு ஒளிபரப்பாக உள்ள 2 பிரபலமான சன் டிவி சீரியல்கள்.. இது எப்போ?

இதே போன்று சிலர் சாந்தினியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளையும் தேவை இல்லாமல் கேட்டனர். குறிப்பாக சமீப காலமாக சாந்தினி தனது கணவர் நந்தா உடன் இருக்க கூடிய போட்டோக்களை ஏன் பதிவிடுவதில்லை என்பன போன்ற கேள்விகளை நெட்டிசன்கள் கேட்டுள்ளனர். மேலும், இவர் தனது கணவரை பிரிந்துவிட்டாரா எனவும் கேட்டுள்ளனர். இதற்கு சாந்தினி அதிரடியாக பதில் கூறினார். இதற்கு பதில் கூறிய சாந்தினி, "தனது பர்சனல் வாழ்க்கையை பிரைவேட் ஆக வைத்திருப்பதாக கூறினார்". எனவே அதனால் அவர் கணவரை பிரியவில்லை என்பது குறித்து உறுதியாக கூறியுள்ளார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Actress, Entertainment, Photo Gallery

அடுத்த செய்தி