Home /News /entertainment /

முதல்முறையாக சின்னத்திரையில் தடம் பதிக்கும் ‘வீடு’ பட புகழ் அர்ச்சனா!

முதல்முறையாக சின்னத்திரையில் தடம் பதிக்கும் ‘வீடு’ பட புகழ் அர்ச்சனா!

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

பிரபல சின்னத்திரை நடிகைகளான காயத்ரி யுவராஜ் யமுனாவாகவும் , மோக்ஷிதா ஹீரோயின்  சக்தியாகவும்  மற்றும்  பிரணிகா தக்ஷு  துர்கா என்ற கதாபாத்திரத்தில் மீனாட்சியின் மகள்களாக நடிக்கின்றனர், அதே சமயம் ஹீரோவாக  வெற்றி கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யன் நடிக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    முதல்முறையாக சின்னத்திரையில் தடம் பதிக்கும் இரண்டு முறை தேசிய விருது பெற்ற ‘வீடு’ பட புகழ் அர்ச்சனா.

    சில நடிகர், நடிகைகள் நீண்ட காலமாக திரை வெளிச்சத்தில் இருந்து விலகி இருந்தாலும் பார்வையாளர்களின் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள். அத்தகைய நடிகர்களில் ஒருவர் தான் நடிகை அர்ச்சனா. எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவதில் திறமையான நடிகையான இவர் இரண்டு முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றவர். இதுவரை சின்னத்திரை பக்கமே வராத இவர் முதல் முறையாக ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் மூலம் தொலைக்காட்சியில் நுழைகிறார்.

    மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தனது கேரியரில் சுமார் 35 திரைப்படங்களில் நடித்துள்ள அர்ச்சனா, வலிமையான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகையாக கொண்டாடப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலில் மூன்று மகள்களின் அம்மாவாக நடிக்க உள்ளது ஆச்சரியமில்லை.

    மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் கதை மீனாட்சி மற்றும் அவரது மூன்று மகள்களான யமுனா, சக்தி மற்றும் துர்கா ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. மீனாட்சி ஒரு எளிய பெண்மணி, அவர் தனது மகள்களை தானே வளர்த்து வருகிறார். அவருக்கு ஆண் குழந்தை பிறக்காததால் கணவர் அவரை கைவிட்டு விட்டார். இதனால், அவரது வாழ்க்கை அவரது மூன்று மகள்களைச் சுற்றியே சுழலத் தொடங்குகிறது.

    ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கும் தனது மகள்களுடன் சேர்ந்து, நிலையான வருமானம் ஈட்டுவதற்காக ‘மீனாட்சி மெஸ்’ என்ற சிறிய உணவகத்தை நடத்துகிறார். அவள் தன் பிள்ளைகளுக்கு தைரியம் சேர்ப்பதோடு, அவர்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்க கடினமாக உழைக்கிறாள். ஒவ்வொரு தாயையும் போல, தன் மகள்களுக்கு திருமணம் செய்துவைத்து, அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான் இவரது மிகப்பெரிய கனவு.

    Also read... வித்யா நம்பர் 1 சீரியலில் இயக்குநர் பாக்கியராஜ்

    பிரபல சின்னத்திரை நடிகைகளான காயத்ரி யுவராஜ் யமுனாவாகவும் , மோக்ஷிதா ஹீரோயின்  சக்தியாகவும்  மற்றும்  பிரணிகா தக்ஷு  துர்கா என்ற கதாபாத்திரத்தில் மீனாட்சியின் மகள்களாக நடிக்கின்றனர், அதே சமயம் ஹீரோவாக  வெற்றி கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யன் நடிக்கிறார்.

    மீனாட்சி தனது குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை வழங்குவதற்கும் எப்படி எல்லா தடைகளையும் எதிர்கொள்கிறாள் என்பதுதான் கதையின் மையக்கரு. மீனாட்சி பொண்ணுங்க சீரியல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல்  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடதக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி