வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த பிரபல நடிகை சார்மிளா மகனுக்கு கடந்த 6 வருடமாக நடிகர் விஷால் ஸ்கூல் ஃபீஸ் கட்டி வருகிறார். இந்த உண்மையை நன்றியுடன் சார்மிளா பேட்டியில் கூறி இருக்கிறார்.
நல்லதொரு குடும்பம், தையல்காரன், கிழக்கே வரும் பாட்டு, முஸ்தபா ,மனசே மவுனமா உள்பட பல படங்களில் நடித்தவர் சார்மிளா.தமிழ் மட்டுமில்லை மலையாளம், கன்னடத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மலையாளத்தில் மோகன் லால், மம்மூட்டி என டாப் ஸ்டார்கள் படத்திலும் நடிகை, துணை நடிகை, தங்கை ரோல்களில் சார்மிளா நடித்துள்ளார். ஒரு சின்ன பிரேக்குக்கு பின்பு சின்னத்திரையில் கவனம் செலுத்த தொடங்கியவர் சன் டிவி, விஜய் டிவி சீரியல்களில் நடித்தார். கடைசியாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக்கிங் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியிலும் சார்மிளா கலந்து கொண்டிருந்தார்.
பிக் பாஸ் சீசன் 6 க்கு செல்லும் குக் வித் கோமாளி பிரபலம்.. இணையத்தில் உலாவும் இந்த செய்தி உண்மையா?
சார்மிளாவின் கெரியர் ஹிட் அடித்தது. ஆனால் மண வாழ்க்கை சரிவர அமையவில்லை. முதல் திருமணம் விவாகரத்தில் முடிய சில வருடங்களுக்கு பிறகு மறுமணம் செய்து கொண்டார். கடைசியில் அதுவும் டைவர்ஸில் முடிய இப்போது சிங்கிள் மதராக தனது மகனை வளர்த்து வருகிறார். சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்தித்த சார்மிளா சமீபத்தில் யூடியூப்பில் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் பல விஷயங்களை சார்மிளா ஷேர் செய்துள்ளார்.
நிறத்தை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி.. சுந்தரி, கண்ணம்மாவுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்!
அதில் கடந்த 6 வருடமாக தனது மகனின் ஸ்கூல் ஃபீஸை நடிகர் விஷால் தான் கட்டி வருகிறார். அவர் மிகவும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர் எனவும் சார்மிளா குறிப்பிட்டுள்ளார். இதுவரை விஷால் ஒருமுறை கூட கால் செய்து பேசியது இல்லையாம். அவரிடம் இருந்து மெசேஜ் மட்டும் தான் வருமாம். அதில் ”கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார். நான் இருக்கிறேன் கவலை வேண்டாம்” என்று அனுப்புவாராம்.

நடிகை சார்மிளா
சார்மிளாவின் மகனுக்கு மட்டுமில்லை இதுபோல பலரின் குழந்தைகளுக்கு வெளியில் சொல்லாமல் பல உதவிகளை விஷால் செய்து வருவதாக சார்மிளா அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.