தளபதி விஜய் இந்த பெயரைக் கேட்டாலே அனைவருக்குள்ளும் புது உற்சாகம் தொற்றிக்கொள்ளும். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா என அண்டை மாநிலங்களிலும் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். விஜய் நடிக்கும் படத்தின் டிரெய்லர், டீசர், போஸ்டர்கள், பாடல்கள் என்றில்லாமல், விஜய் பற்றி தனிப்பட்ட முறையில் வெளியாகும் போட்டோக்களையும் தளபதி ஃபேன்ஸ் வேற லெவலுக்கு வைரலாக்கி விடுவார்கள்.
அப்படி சின்னத்திரை நடிகர் ஒருவரது வீட்டின் முக்கிய விசேஷத்தில் தளபதி விஜய் பங்கேற்ற புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வேற லெவலுக்கு வைரலாக்கி வருகின்றனர். தளபதி விஜய் ஷூட்டிங்கை தவிர அவ்வப்போது நண்பர்கள், ரசிகர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உண்டு. எப்போதாவது ஒருமுறை தான் விஜய்யை இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் பார்க்க முடியும் என்பதால் அதுதொடர்பான போட்டோஸ் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்படும்.
சின்னத்திரையில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ரீகுமார் திருமணத்தில் நடிகர் விஜய் பங்கேற்ற புகைப்படங்களை ஸ்ரீகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். சீரியல்களில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் ஸ்ரீகுமாருக்கும், பாண்டவர் பூமி படத்தில் ‘தோழா தோழா’பாடல்கள் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஷமிதாவிற்கும் நடைபெற்ற திருமணத்தில் நடிகர் விஜய் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘சிவசக்தி’ சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார் ஷமிதா. அதில் தன்னுடன் இணைந்து நடித்த சீரியல் நடிகர் ஸ்ரீ குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்தத் தம்பதிக்கு அழகான 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீகுமார் - ஷிமிதா ஜோடிக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில், தங்களது வீட்டில் நடந்த விசேஷங்களில் நடிகர் விஜய் பங்கேற்ற போட்டோக்களை ஸ்ரீகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிட்டாரே... அதிர்ச்சியைக் கிளப்பும் புகைப்படம்
அப்போது விஜய் அதிகம் அணிந்து செல்லும் கண்ணாடியுடன், எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சாதாரணமாக பங்கேற்றுள்ள போட்டோஸை பார்த்து “தளபதி அப்போ இப்போ எப்பவுமே செம்ம சிம்பிள்பா” என அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஸ்ரீகுமார் விஜய் தனது சகோதரி திருமணத்தில் பங்கேற்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவில் அம்மா சோபாவுடன் பங்கேற்றிருக்கும் விஜய் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார்.
விஜயகாந்தின் கம்பீர தோற்றம் எங்கே... புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்
ஒல்லியான தேகம், சிம்பிளான சட்டை, பேண்ட் என சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்த சிறிய வயது விஜய்யின் போட்டோவும் சோசியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஷமிதா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு சீரியலில் நடித்து வருகிறார். ஸ்ரீகுமார் தற்போது ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, வானத்தைப்போல போன்ற சீரியல்களில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.