Home /News /entertainment /

Namma Madurai Sisters | 'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' தொடரில் புதிதாக அறிமுகமாக உள்ள முக்கிய நபர் இவரா.?

Namma Madurai Sisters | 'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' தொடரில் புதிதாக அறிமுகமாக உள்ள முக்கிய நபர் இவரா.?

Namma Madurai Sisters

Namma Madurai Sisters

Namma Madurai Sisters | இந்த தொடரின் புதிய கதைக்காகவே பலரும் இதை விரும்பி பார்த்து வருகின்றனர். அதே போன்று சீரியலும் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக செல்கிறது. மதுரையைப் பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ நான்கு சகோதரிகளின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமானதாக இதில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் மிகவும் புதுமையானதாக உள்ளன. அதனால் தான் பலரும் கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்களை பெரிதும் விரும்பி பார்க்கிறார்கள். அதே போன்று மக்களின் ரசனைக்கேற்ப சில மாற்றங்களையும் எல்லா சீரியல்களிலும் செய்து வருகின்றனர். இது தான் இவர்களின் முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அரைத்த மாவையே அரைக்காமல் புதிய புதிய கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் அறிமுகம் செய்து வருகின்றனர். இது கூடுதல் பலமாகவும் கலர்ஸ் சேனலுக்கு அமைகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமாகிய ஒரு சிறந்த தொடர் தான் ''நம்ம மதுரை சிஸ்டர்ஸ்'.

இந்த தொடரின் புதிய கதைக்காகவே பலரும் இதை விரும்பி பார்த்து வருகின்றனர். அதே போன்று சீரியலும் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக செல்கிறது. மதுரையைப் பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ நான்கு சகோதரிகளின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமானதாக இதில் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன், நாடகம் மற்றும் காதல் ஆகியவற்றால் இந்த தொடர் முழுமை பெறுகிறது. பெற்றோரை இழந்து இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்புகளைச் சுமந்த இந்திராணியின் வாழ்க்கையை விவரிக்கிறது.

தற்போது இந்திராணி (சாயா சிங் கதாபாத்திரம்) மார்க்கெட்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, ராஜ மாணிக்கம் சவாலில் தோற்றுள்ளார். எனவே மதுரை சகோதரிகளுக்குச் சொந்தமான அன்னம் அங்காடிக்கு தனது மகன்களில் ஒருவரைத் தொழிலாளியாக அனுப்ப வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். ஆனால், இதில் மூத்த மகன் சிவகுமாருக்குப் பதிலாக இளைய மகனான நந்தா செல்ல உள்ளார். இந்த வாய்ப்பை காவியாவை கவர்வதற்கான ஒரு வாய்ப்பாக நந்தா பார்க்கிறார்.அதன்படி நந்தா காவ்யா மனதில் இடம் பிடிக்க அன்னம் அங்காடியுடன் இணைகிறார். நந்தா பளபளப்பான தோற்றத்துடன் கடைக்குள் நுழைகிறார். ஆனால் இந்திராணி மற்ற ஊழியர்களைப் போலவே சீருடை அணியுமாறு அவருக்கு கட்டளையிடுகிறார். பின்னர், மற்றவர்களை போலவே கடினமாக உழைக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். இவ்வாறாக செல்கின்ற இந்த தொடரில் நந்தா காவியாவின் மனதை வெல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : ஊருக்கு மட்டும் தான் உபதேசம்... ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்த காயத்ரி ரகுராம்

மேலும் தனது பெற்றோரின் மரணத்திற்குப் பழிவாங்கவும், தனது சகோதரிகளைப் பாதுகாக்கவும் இந்திராணி துணிச்சலான பெண்ணாக இருக்கிறார். மூன்று தங்கைகளான மேகலா (சுனிதா), புவனா (சங்கவி), மற்றும் காவ்யா (ஐரா அகர்வால்) ஆகியோரின் பயணத்தையும் இந்த தொடரில் சிறப்பாக காட்டி உள்ளனர். நடிகர் ஐரா அகர்வாலுக்கு ஜோடியாக தொலைக்காட்சி நடிகர் தீபக் குமார் நடித்து வருகிறார்.

Also Read : நேஷ்னல் க்ரஷ் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

ராஜா மாணிக்கத்தின் முதல் மகனான சிவக்குமார் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த ஹரி ஷங்கர் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகுகிறார். எனவே இவருக்கு பதிலாக தற்போது நடிகர் வெங்கடேஷ் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் இதற்கு முன்பு சித்திரம் பேசுதடி, பேரன்பு போன்ற தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial

அடுத்த செய்தி