பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்கிறேனா? - பிரபல நடிகர் விளக்கம்

நடிகர் தருண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை அவர் மறுத்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்கிறேனா? - பிரபல நடிகர் விளக்கம்
பிக்பாஸ்
  • Share this:
ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 3 சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த ஆண்டு கொரோனா லாக்டவுனால் தமிழில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்கப்படுமா என்பது பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4-க்கான டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், விரைவில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், 2-வது சீசனை நானியும், 3-வது சீசனை நடிகர் நாகர்ஜூனாவும் தொகுத்து வழங்கி இருந்தார்கள்.


தற்போது 4-வது சீசனையும் நடிகர் நாகர்ஜூனாவே தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 3 சீசன்களைப் போலவே இந்த முறையும் ‘ஸ்டார் மா’ சேனலில் ஒளிபரப்பாகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சீசனில் கலந்து கொள்ளப்போவதாக சில திரைபிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. அதில், ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் நடித்த நடிகர் தருண் பெயரும் இடம்பெற்றிருந்தது.


 
View this post on Instagram
 

To all the wonderful ppl out there ❤️ #stayhomestaysafe #positivevibes


A post shared by Tharun (@actortarun) on


மேலும் படிக்க: அந்த அரபிக்கடலோரம் பாடலுக்கு கண்ணாடி முன்பு நடனமாடும் நடிகை பிரகதி - பாராட்டும் ரசிகர்கள்

இந்நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் நடிகர் தருண், “நான் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்ளப்போவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை. அனைத்தும் வதந்திகள். போலியான செய்திகளை நம்ப வேண்டாம். வதந்திகளை பரப்பாதீர்கள்” என்று கூறியுள்ளார்.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading