உயிரை மாய்த்துக் கொண்ட இளம் டிவி நடிகர் - சோகத்தில் திரையுலகினர்

சின்னத்திரை நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரை மாய்த்துக் கொண்ட இளம் டிவி நடிகர் - சோகத்தில் திரையுலகினர்
சுஷீல் கவுடா
  • Share this:
கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் சுஷீல் கவுடா. அந்தபுரா என்ற தொடர் இவரை மக்களிடம் பிரபலமடையச் செய்தது. நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார். 30 வயதாகும் இவர் மாண்டியாவில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சுஷீல் கவுடா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது மரணம் குடும்பத்தார் மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

சுஷீல் கவுடா காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சலாகா என்ற திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. துனியா விஜய் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். சுஷீல் மரணம் குறித்து தனது ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டிருக்கும் துனியா விஜய், அவரை நான் முதலில் பார்த்தபோது நல்ல ஹீரோவாக வருவார் என்று நினைத்தேன். படம் வெளியாவதற்குள் எங்களை விட்டுச் சென்றுவிட்டார். என்ன பிரச்னைகள் இருந்தாலும் தற்கொலை தீர்வாகாது. தொடர் மரணங்கள் இந்த ஆண்டு முடிவடையாது என்று நினைக்கிறேன். கொரோனா காலத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.” என்று நீண்ட பதிவை எழுதியிருக்கிறார்.
சுஷீல் கவுடாவுடன் நடித்த அமிதா ரங்கநாத் கூறுகையில், என் நண்பரின் மூலம் செய்தி கிடைத்தது. சுஷில் கவுடா இல்லை என்று இன்னும் நம்பமுடியவில்லை. மிகவும் இளகிய மனதுடையவர். திரைப்படதுறையில் அதிகம் சாதிக்க வேண்டும் என்று நினைத்தார். இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு செல்வார் என்று நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.


சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுஷீல் கவுடா மரணமும் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading