Home /News /entertainment /

விரைவில் ராம் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு?

விரைவில் ராம் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு?

ராம் - சிம்பு

ராம் - சிம்பு

வெந்து தணிந்தது காடு தவிர்த்து ஹன்சிகாவின் மஹா, கௌதம் கார்த்திக்குடன் நடிக்கும் பத்து தல, கோகுல் இயக்கத்தில் கொரோனா குமாரு என மூன்று படங்கள் சிம்புவின் கைவசம் உள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
மாநாடு படத்துடன் தமிழின் மோஸ்ட் வான்டட் நடிகராகியிருக்கிறார் சிம்பு. விரைவில் அவர் ராம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

சிம்பு என்றால் வம்பு என்றே கோடம்பாக்க அகராதியில் எழுதப்பட்டிருந்தது. அதற்கு எந்த பங்கமும் வராமல் தான் சென்ற வருடம்வரை அவர் நடந்து கொண்டார். அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் போது அவர் நடத்திய ஒத்துழையாமை தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டத்தை தந்தது. மாநாடு படத்தில் ஒப்பந்தமான பிறகு அவர் காட்டிய அலட்சியத்தால் தயாரிப்பாளர் கசப்புற்று படத்தை கைவிடுவதாக அறிவித்தார். பலகட்ட பஞ்சாயத்துகள், உறுதிமொழிகளுக்குப் பிறகுதான் மாநாடு டேக் ஆஃப் ஆனது.

ஆனால் இவையெல்லாம் பழங்கதை, சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்துடன் சிம்புவிடமிருந்து சனீஸ்வரன் விடைபெற்றார். குறுகிய காலத்தில் ஈஸ்வரனில் நடித்துத் தந்தார். அடுத்து மாநாடு படத்துக்கும் அதே ஒத்துழைப்பை அளித்தார். இப்போது வெந்து தணிந்தது காடு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

வெந்து தணிந்தது காடு தவிர்த்து ஹன்சிகாவின் மஹா, கௌதம் கார்த்திக்குடன் நடிக்கும் பத்து தல, கோகுல் இயக்கத்தில் கொரோனா குமாரு என மூன்று படங்கள் உள்ளன. இவற்றை முடித்த பின் மீண்டும் கௌதம் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க உள்ளார். நதிகளிலே நீராடும் சூரியன் படமாக அது இருக்கலாம். அத்துடன் ராம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது. அர்த்தமற்ற காதல், ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த சிம்புவுக்கு இந்த படவரிசை தமிழ் சினிமாவில் முன்வரிசையை பெற்றுத் தரும்.

ராம் இப்போது நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் அவர் இயக்கும் அடுத்தப் படம் சிம்புவுடையதாக இருக்கும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Simbu

அடுத்த செய்தி