பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி, நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது. இது தொலைக்காட்சி ரசிகர்கலிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவரது அரசியல் பார்வைகளை மக்களுக்கு எளிதாக எடுத்துச் சொல்லும் மேடையாக பிக் பாஸ் நிகழ்ச்சி அமைந்தது.
'பிக் பாஸ் 5' முதல் மூன்று சீசன்களைப் போலவே இந்தாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கவிருக்கும் விஷயத்தை முன் கூட்டியே தெரிவித்தோம். கடந்தாண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோயால் 'பிக் பாஸ் 4' தாமதமாக அக்டோபரில் தொடங்கி ஜனவரியில் முடிவடைந்தது.
Keerthy Suresh: ட்ரெண்டிங் பாடலுக்கு முதன்முறையாக நடனமாடிய கீர்த்தி சுரேஷ்!
இதற்கிடையே தொகுப்பாளர் கமல் ஹாசன் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்திற்கான தனது முதல் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறார். ஒருவேளை பெரும் வெற்றியையோ அல்லது எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளையோ கமல் பெற்றால், அவர் அரசியலில் இன்னும் கவனம் செலுத்த நேரிடும்.
படப்பிடிப்பு தளத்தில் தகராறு, பத்திரிக்கையாளரை தாக்க முயற்சி – விஜய் சேதுபதி படப்பிடிப்பு நிறுத்தம்
இந்த சூழ்நிலையை மனதில் கொண்டு, 'பிக் பாஸ் 5' தயாரிப்பாளர்கள் கமலுக்கு பதிலாக சிம்புவுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகவும், அவரும் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுப்பாளர் மாற்றம் நடைபெறுமா இல்லையா என்பது நடக்கவிருக்கும் தேர்தலை பொறுத்து நிகழும்.
இதற்கிடையில் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அதோடு கெளதம் கார்த்திக்குடன் இணைந்து ‘பத்து தல’ படத்திலும் நடிக்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamal Haasan, Simbu