• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஷ்ரேயா என் பொண்டாட்டின்னு நினைக்கவே இல்ல - சித்து உணர்ச்சிப்பதிவு

ஷ்ரேயா என் பொண்டாட்டின்னு நினைக்கவே இல்ல - சித்து உணர்ச்சிப்பதிவு

சித்து - ஷ்ரேயா

சித்து - ஷ்ரேயா

’திருமணம் சீரியல் பன்ணும் போது எனக்குக் கொஞ்சம் கூட தெரியாது இந்த பொண்ணு தான் என் பொண்டாட்டியா வரப்போகுதுன்னு’ எனத் தெரிவித்துள்ளார் சித்து.

  • Share this:
    திருமணம் சீரியலில் நடிக்கும் போது இந்தப் பெண் தான் தனக்கு மனைவியாக வருவார் என நினைக்கவில்லை என சீரியல் நடிகர் சித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியல், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து ரசிகர்களிடம் பரிச்சயமானார்கள்.

    திருமணம் சீரியல் மூலம் அவர்களுக்கு நிறைய ரசிகர் பட்டாளங்கள் உருவாகின. அதோடு இணையத்தில் அவர்களின் ரொமான்ஸ் வீடியோக்களும் படு ஹிட்டடித்தன. நன்றாக போய்க்கொண்டிருந்த திருமணம் சீரியல், கொரோனாவால் நிறைவு பெற்றது.

    ஆனால் அதில் நடித்த சித்து மற்றும் ஸ்ரேயா இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. காதலர்கள் தங்களின் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தனர். இதையடுத்து கடந்த வாரம் சித்து - ஷ்ரேயா இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸை குவித்தன.



     




    View this post on Instagram





     

    A post shared by Sidhu (@sidhu_sid_official)






    இந்நிலையில் திருமணம் சீரியலின் ரீல் ஜோடி படத்தையும், நிஜ திருமணத்தில் எடுக்கப்பட்ட படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சித்து, “திருமணம் சீரியல் பன்ணும் போது எனக்குக் கொஞ்சம் கூட தெரியாது இந்த பொண்ணு தான் என் பொண்டாட்டியா வரப்போகுதுன்னு. எங்க ஆடியன்ஸ் சொல்வாங்க, நீங்க ரெண்டு பேரும் ஒரு மேஜிக்ன்னு, அது உண்மை தான் போல. பியூட்டிஃபுல் ஃபீலிங்... நான் கேக்காமலே கெடச்ச வரம் தான் ஷ்ரேயா. லவ் யூ பொண்டாட்டி” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: