எப்பொழுதும் பாத்ரூமில் கவின்! கேலி செய்த சதீஷ்

பிக்பாஸ் வீட்டினுள் ஆண்களை விட பெண்களிடம் அதிகம் நட்பு பாராட்டி வரும் கவினை பிக்பாஸ் பார்வையாளர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

news18
Updated: July 10, 2019, 5:30 PM IST
எப்பொழுதும் பாத்ரூமில் கவின்! கேலி செய்த சதீஷ்
சதிஷ், கவின்
news18
Updated: July 10, 2019, 5:30 PM IST
பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வரும் கவினை நகைச்சுவை நடிகர் சதீஷ் கிண்டலடித்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் துவங்கியது. பாத்திமா பாபு, சேரன், அபிராமி, சாக்‌ஷி, சரவணன், மோகன் வைத்யா, ஷெரின், மதுமிதா, தர்ஷன், முகென், ரேஷ்மா, மீரா மிதுன், சாண்டி, லாஸ்லியா, கவின் உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

இதில் கடந்த வார இறுதியில் முதல் ஆளாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் பாத்திமா பாபு. 16-நாட்களைக் கடந்திருக்கும் இந்நிகழ்ச்சியில் வனிதா விஜய்குமாரை பிக்பாஸ் வீட்டின் வில்லியாக கருதுகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

அதேபோல் வீட்டிலிருக்கும் ஒவ்வொரு போட்டியாளரின் நடவடிக்கைகளை வைத்து அவர்கள் மீதான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே அபிராமி - கவின் மீது காதல் ஏற்பட்டதாக தெரிவித்தார். ஆனால் கவினோ வீட்டிலிருக்கும் சாக்‌ஷி, லாஸ்லியோ ஆகியோர் மீதும் நட்பு கலந்த அன்பு இருப்பதாக கூறி வருகிறார். ஆனால் லாஸ்லியா அண்ணன் என்று கூப்பிட்டால் கூட கவின் கோபப்படுகிறார்.

சாக்‌ஷி மற்றும் கவின்


கடந்த வார இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போன் செய்த பார்வையாளர் ஒருவர் கவினிடம் நிகழ்ச்சியில் நீங்கள் யாரைக் காதலிக்கிறீர்கள் என்ற கேள்வியை முன் வைத்தார். அதற்கு பதிலளித்த கவின், “நான் யாரையுமே காதலிக்கவில்லை. என்னுடைய அத்தை வீட்டுப் பெண்களிடம் எப்படி சகஜமாக பழகுவேனோ அப்படி தான் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களிடமும் பழகுகிறேன்” என்றார்.பிக்பாஸ் வீட்டினுள் ஆண்களை விட பெண்களிடம் அதிகம் நட்பு பாராட்டி வரும் கவினை பிக்பாஸ் பார்வையாளர்கள் அதிகம் விமர்சித்து  வருகின்றனர். அந்த வகையில் அடிக்கடி பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வரும் நடிகர் சதீஷ், “எப்பொழுதும் பாத்ரூமில் இருப்பது பேஸ்ட், பிரஸ், கவின்?” என்று ஆப்ஷன் முறையில் கூறியுள்ளார்.நடிகர் சதீஷ் கவினை மட்டும் விமர்சிக்கவில்லை. பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் ஆதிக்கம் அதிகம் இருந்தபோது, “அது பிக்பாஸ் வீடா....?!?! இல்ல அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா..?!?! அந்த ஒருத்தர் யாருனு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கபா” என்று மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

வீடியோ பார்க்க: இயக்குநர் சங்கத்திற்குள் மதுபாட்டில்கள் வந்தது எப்படி? கரு.பழனியப்பன் கேள்வி

First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...