பிக்பாஸ் வீட்டுக்கு அதற்காக செல்லவில்லை; என்னை அவமானப்படுத்தி வெளியேற்றிவிட்டார்கள் - சரவணன்

”நான் கூறிய கருத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் இவ்வாறு நடந்து கொண்டது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது”

Web Desk | news18
Updated: August 10, 2019, 8:42 PM IST
பிக்பாஸ் வீட்டுக்கு அதற்காக செல்லவில்லை; என்னை அவமானப்படுத்தி வெளியேற்றிவிட்டார்கள் - சரவணன்
நடிகர் சரவணன்
Web Desk | news18
Updated: August 10, 2019, 8:42 PM IST
பிக்பாஸில் மன்னிப்பு கேட்ட பின்பும் என்னை வெளியேற்றியது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று சரவணன் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கின் போது சேரன் தன்னை தவறாக தொட்டதாக மீராமிதுன் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து போட்டியாளர்கள் மத்தியில் உரையாடினார் கமல்ஹாசன். அப்போது பேசிய சரவணன், தனது கல்லூரி காலத்தில் பேருந்தில் பயணிக்கும் போது பெண்களை உரசியதாக வெளிப்படையாக கூறினார்.

இந்த விவகாரத்துக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. பின்னணிப் பாடகி சின்மயி இதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார். இதையடுத்து சரவணனை மன்னிப்பு கோரும்படி பிக்பாஸ் கூறினார்.


அப்போது கன்பெஷன் ரூமில் பேசிய சரவணன், "கல்லூரியில் படிக்கும் போது நான் செய்த தவறுகள் பற்றி பேசினேன். அதுபோல யாரும் செய்யாதீர்கள் என சொல்வதற்காகத்தான் அதை சொன்னேன். ஆனால் அப்போது என்னால் முழுவதுமாக பேச முடியவில்லை. இந்த தருணத்தில் நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்றார். இதையடுத்து இந்தவிவகாரம் முடித்துவைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று சரவணனை கன்பெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ், “பெண்களைப் பற்றிய தவறான கருத்துகளைக் கூறியதால், பிக்பாஸ் குழு உங்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இப்படியே சென்று விடுங்கள்” என்று கூறினார். இப்படியே சென்று விடுங்கள் என்று கூறியதற்கு மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து வெளியேறினார் சரவணன்.

இந்த நிலையில் சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர்  நான் பிக்பாஸில் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு பணம் பங்குபெற்று வரலாம் அதன் மூலம் புது வாழ்க்கையை துவங்கலாம் என எண்ணியிருந்தேன் . ஆனால், எனக்கு இப்படியொரு அவப்பெயரையும், கலங்கத்தையும் ஏற்படுத்தி என்னை வெளியே அனுப்பிவிட்டார்கள்.

Loading...

நான் கல்லூரி படித்த காலத்தில் பேருந்தில் பெண்களிடம் விளையாட்டாக  தவறாக நடந்து கொண்டது உண்மை தான். ஆனால் நான் பிக்பாஸ் வீட்டிற்கு அதற்காக செல்லவில்லை. அங்கிருக்கும் பெண்களிடம் கண்ணியமாக தான் நடந்துகொண்டேன். அப்படியிருந்தும் என்னை இப்படி அவமானப்படுத்தி வெளியேற்றிவிட்டார்கள்.


இது முன்னரே தெரிந்தால் நான் பிக்பாஸிற்கு சென்றிருக்கவே மாட்டேன். எனக்கு ஒரே ஒரு மன கஷ்டம் தான், நான் கூறிய கருத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் இவ்வாறு நடந்து கொண்டது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று சரவணன் தெரிவித்துள்ளார்.


Also see...

First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...