சன் டிவி-யின் பிரபல சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய முக்கிய நடிகர்.!

தாலாட்டு

பல சீரியல்களில் நடித்துள்ள நடிகர் ரிஷி கேஷவ், சமஸ்தானம் மற்றும் யாவரும்நலம் ஆகிய படங்களின் மூலம் வெள்ளித்திரையில் தோன்றி இருக்கிறார்.

  • Share this:
தமிழ் டிவி ரசிகர்களை மகிழ்விக்கும் வேலையை டிவி சேனல்களும், சின்னத்திரை நடிகர்களும் தீவிரமாக செய்து வருவதால் மக்களிடையே சீரியல்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தியேட்டரில் சினிமாவை பார்த்து அப்படியே ஒன்றி போய் விடுவது போல, சின்னத்திரை சீரியல்களில் ஒன்றி வாழும் ரசிகர்கள் ஏராளம். சீரியல்கள் மூலம் நம் வீட்டிற்கே தேடி வரும் கலைஞர்கள் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடையே வெகுவாக பிரபலமாகி விடுகிறார்கள். அப்படி பிரபலமான தமிழ் சீரியல் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ரிஷி கேஷவ்.

நீங்கள் சட்டென்று அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமென்றால் ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மாவில், நாயகன் பாரதியின் தந்தையாக வேணு கோபாலகிருஷ்ணன் என்ற கேரக்டரில் நடிப்பவர் ஆவார். இதுவரை பல சீரியல்களில் நடித்துள்ள நடிகர் ரிஷி கேஷவ், சமஸ்தானம் மற்றும் யாவரும்நலம் ஆகிய படங்களின் மூலம் வெள்ளித்திரையில் தோன்றி இருக்கிறார். இதனிடையே சன் டிவி-யில் கடந்த ஏப்ரல் முதல் பிற்பகல் 2.30 மணிக்கு தாலாட்டு என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் தான் இந்த சீரியல் 100 எபிசோட்களை வெற்றிகரமாக கடந்தது. இந்த சீரியலில் விஜயகிருஷ்ணன் என்ற கேரக்டரில் தெய்வமகள் புகழ் நடிகர் கிருஷ்ணா, இசைப்பிரியாவாக நடிகை ஸ்ருதிராஜ், சின்னத்தாயி / தாயம்மா என்ற கேரக்டரில் நடிகை ஸ்ரீலதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திங்கள் - சனி பிற்பகல் 2.30 மணிக்கு துவங்கி அரைமணி நேரம் ஒளிபரப்பாகி வந்த தாலாட்டு சீரியல், தற்போது 3.30 மணி வரை 1 மணி நேரமாக சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் நடிகர்களுக்கு வெள்ளித்திரை நடிகர்களை போல ஒரே சேனலில் கமிட் ஆகி நடிக்க வேண்டும் என்பதில்லை. தேதியும், நேரமும் இருந்தால் ஒரே நேரத்தில் பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியலிகளில் நடித்து புகழ் பெறலாம், பணமும் சம்பாதிக்கலாம். அந்த வகையில் நடிகர் ரிஷி கேஷவ் கடந்த ஏப்ரல் முதல் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான தாலாட்டில், நாயகன் விஜயின் வளர்ப்பு தந்தை, தேவியின் தந்தை மற்றும் கதையில் வில்லனாக முத்தையா என்ற கேரக்டரில் நடிகர் ரிஷி கேஷவ் நடித்து வந்தார்.

Also read... அம்மன் சீரியலில் முக்கிய ரோலில் நடிப்பதன் மூலம் முதல் முறையாக தமிழுக்கு வந்த கன்னட நடிகை!

இந்நிலையில் சன் டிவி-யின் தாலாட்டு சீரியலில் இருந்து நடிகர் ரிஷி கேஷவ் திடீரென்று விலகி இருக்கிறார். இனி நடிகர் ரிஷி கேஷவ் நடித்த முத்தையா கேரக்டரில், ஏற்கனவே பல சீரியல்களில் காமெடி + வில்லத்தனம் உள்ளிட்டவற்றை இணைத்து ரசிக்க கூடிய நடிப்பை வெளிப்படுத்தும் பிரபல சீரியல் நடிகர் பொள்ளாச்சி பாபு நடிக்கிறார். ஏற்கனவே சன் டிவி-யில் ஒளிபரப்பான பல சீரியல்களில் தோன்றி தனது அபார நடிப்பால் ஏற்கனவே தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் அபிமானம் பெற்றுள்ள நடிகர் பொள்ளாச்சி பாபு, தாலாட்டு சீரியலில் இணைந்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது என்றாலும் மற்றொரு பிரபல நடிகரான ரிஷி கேஷவ் ஏன் தாலாட்டு சீரியலை விட்டு விலகி இருக்கிறார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
Published by:Vinothini Aandisamy
First published: