பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் ரஞ்சித் புதிதாக இணைந்துள்ளார்.
விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்ளும் கோபி பக்கத்து வீட்டிற்கு குடி வருகிறான். அவ்வப்போது பாக்கியாவை சீண்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறான். கேட்டரிங் தொழில் செய்து, குடும்பத்தை காப்பாற்றி வரும் பாக்கியா, கூடவே பல பிரச்னைகளையும் சாமாளித்து வருகிறாள்.
இன்றைய எபிசோடில் அவமானப்படுத்திய ராதிகா முன்பு சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும் என்ற நோக்கில், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பில் சேர வருகிறார் பாக்யா. மறுபுறம் இனியா, மயூவுக்கு சைக்கிள் வாங்கித் தர ராதிகாவுடன் கடைக்கு செல்கிறார் கோபி. அப்போது இனியா குறைந்த விலையில் சைக்கிள் ஒன்றை எடுக்க, ’இதைவிட நல்லதா பிராண்ட்ல பாரு, பிராண்டாக எடுத்தால் தான் ரொம்ப நாளைக்கு நல்லா ஓடும்’ என கோபி சொல்ல, ஏற்கனவே எடுத்து வைத்திருந்த சைக்கிளை வைத்துவிட்டு ஃபாரின் பிராண்ட் சைக்கிள் ஒன்றை எடுக்கிறார் ராதிகா. அதன் விலை 27,000 என்பதைப் பார்த்து அதிர்ந்து போகிறார் கோபி. விலை அதிகமா இருக்கே எனக் கேட்க, இனியாவை மட்டும் பிராண்டடா எடுக்க சொன்னீங்க? என்கிறார் ராதிகா. சிக்கலில் மாட்டிக் கொண்ட கோபி, சரி எடுத்துக்கோங்க என புலம்பிக்கொண்டே பில் செய்கிறார்.
ஒரே டான்ஸ் ஆடி ஊரில் வீடு.. அமுதவாணனுக்கு தங்க மோதிரம் பரிசளித்த ராமராஜன்.!
பின்னர் ஃபோன் பேசிக் கொண்டே இருசக்கர வாகனத்தில் வரும் பாக்யா, எதிரில் வரும் புல்லட்டில் மோதி கீழே விழுகிறார். அவர் வேறு யாருமல்ல நடிகர் ரஞ்சித். ஏற்கனவே அவர் விஜய் டிவி-யில் செந்தூரப்பூவே சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார். மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார் கோபி. தற்போது ரஞ்சித் எண்ட்ரியாகியிருக்கும் நிலையில், அவரும் பாக்யாவும் நட்பாகும்படி கதை செல்லும் எனத் தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.