முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒரே டான்ஸ் ஆடி ஊரில் வீடு.. அமுதவாணனுக்கு தங்க மோதிரம் பரிசளித்த ராமராஜன்.!

ஒரே டான்ஸ் ஆடி ஊரில் வீடு.. அமுதவாணனுக்கு தங்க மோதிரம் பரிசளித்த ராமராஜன்.!

ராமராஜன் - அமுதவாணன்

ராமராஜன் - அமுதவாணன்

90-களில் முன்னணி நடிகராக திகழ்ந்த ராமராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார். அவர் கலந்துக் கொள்ளும் முதல் சின்னத்திரை நிகழ்ச்சியும் இதுதான்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் 4 நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் நடிகர் ராமராஜன், அமுதவாணனுக்கு தங்க மோதிரம் பரிசளித்து சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் தற்போது கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடுவர்களாக குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் வின்னர் ஸ்ருதிகா அர்ஜுன், மதுரை முத்து, பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் ரேஷ்மா பசுபுலெட்டி, தாடி பாலாஜி ஆகியோர் இருக்கிறார்கள். இதனை அறந்தாங்கி நிஷாவும், கே.பி.ஒய் பாலா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் 4 நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் 90-களில் முன்னணி நடிகராக திகழ்ந்த ராமராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார். அவர் கலந்துக் கொள்ளும் முதல் சின்னத்திரை நிகழ்ச்சியும் இதுதான். அப்போது ராமராஜன் கெட்டப்பில், ‘மதுரை மரிக்கொழுந்து’ பாடலுக்கு நடனமாடுகிறார் அமுதவாணன்.

'செல்போனுக்கு வந்த மோசமான போட்டோஸ்.. கை,கால்கள் நடுங்கும்' - சைபர் க்ரைம் குறித்து ஷாக் தகவல்கள் சொன்ன சுஹாசினி!

' isDesktop="true" id="902098" youtubeid="6PYakChllTA" category="television">

இந்த டான்ஸை எத்தனை முறை ஆடினீர்கள் என்றதற்கு ‘ஒருமுறை’ தான் என பதிலளிக்கிறார் ராமராஜன். ’இந்த பாட்டுக்கு ஆடி எங்க ஊர்ல வீடே கட்டியிருக்கேன்னா பாருங்களேன்’ என்கிறார் அமுதவாணன். அப்போது அவரை அழைத்து, ‘ஆர்’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட மோதிரத்தை அணிவிக்கிறார் ராமராஜன். நடனம், நடிப்பு, காமெடி, பாட்டு என பல திறமைகளை வைத்திருக்கும் அமுதவாணனுக்கு இது மேலும் ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV show, Vijay tv