Home /News /entertainment /

சன் டிவி சீரியல் நடிகருடன் ராஜ்கிரண் மகள் ஜீனத் காதல் திருமணமா?

சன் டிவி சீரியல் நடிகருடன் ராஜ்கிரண் மகள் ஜீனத் காதல் திருமணமா?

ராஜ்கிரண் மகள்

ராஜ்கிரண் மகள்

முனீஸ்ராஜாவும் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகர் ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியாவுக்கு சன் டிவி சீரியல் நடிகருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

    நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ராஜ்கிரண் - ஜோதி தம்பதிக்கு நைனார் முகமது என்ற மகனும் ஜீனத் பிரியா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் ஜீனத் பிரியாவுக்கு சன் டிவி நாதஸ்வரம் சீரியல் புகழ் முனீஸ்ராஜாவுடன் காதல் திருமணம் நடைப்பெற்று இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன. நாதஸ்வரம் சீரியலில் சம்பந்தம் என்ற ரோலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார் நடிகர் முனீஸ்ராஜா. இவர், விரும்பாண்டி புகழ் நடிகர் சண்முகராஜனின் சகோதரர் ஆவார்.

    குடும்பத்துடன் ராஜ் கிரண்


    நாதஸ்வரம் சீரியலுக்கு பிறகு முனீஸ்ராஜா ஜீ தமிழ் சீரியலில் லீட் ரோலில் நடித்தார். அதன் பின்பு வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்தார். அதனைத்தொடர்ந்து அரசியலிலும் ஆர்வம் கொண்டு பழனி தொகுதியில் சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.இந்நிலையில் முனீஸ்ராஜாவும் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக் மூலம் இவர்களின் சந்திப்பு நடந்ததாக தெரிகிறது.

    முனீஸ்ராஜா - ஜீனத்


    இவர்களின் திருமணத்திற்கு ராஜ்கிரண் குடும்பத்தில் சிலர் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் பல பிரச்சனைகளை சந்தித்தும் பெற்றோர்களின் சம்மதத்திற்காக வெயிட் செய்து இருக்கின்றனர். கடைசியில் முனீஸ்ராஜாவின் குடும்பத்தினர் இவர்கள் காதலுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து முனீஸ்ராஜா - ஜீனத் திருமணம் கோவிலில் வைத்து சிம்பிளாக நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஜோடி திருமணத்தை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

    நானும் ரொம்ப மிஸ் பண்றேன்.. பாரதி கண்ணம்மா விலகல் பற்றி பேசிய ரோஷினி!

    சமரச பேச்சு வார்த்தை முடிந்த பின்பு இரு வீட்டாரின் முழு சம்மதத்துடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்ற தகவலும்  வெளியாகியுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Actor rajkiran, Kollywood, Sun TV, TV Serial

    அடுத்த செய்தி