நடிகர் ராகவ் ரங்கநாதன் பெரிய கேப்புக்கு பின்பு சன் டிவி சீரியலில் நடிக்கிறார். இதுக் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
சின்னத்திரை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் ராகவ் ரங்கநாதன் மற்றும் ப்ரீத்தா சுப்ரமணியம் ஜோடியை மறந்து இருக்க மாட்டார்கள்.
இருவரும் தமிழ் ரசிகரக்ளுக்கு அதிகம் பரிட்சயமானவர்கள். சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் கலக்கிய இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு மீடியாவில் இருந்து பிரேக் எடுத்தனர்.ஆனால் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்த இருவரும் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்கள், டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இதன் மூலம் இவர்களால் தொடர்ந்து ரசிகர்களுடன் நெருக்கத்தில் இருக்க முடிந்தது. நடிகர் ராகவ்வை பொறுத்தவரையில் சினிமாவை அதிகம் நேசிக்கும் நபர். தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு அப்படியே உயிர் கொடுப்பார்.
கணவர் குறித்து முதன் முதலாக பேசிய விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா! விவாகரத்து வதந்தி உண்மையா?
அழகு, பிள்ளை நிலா,
அலைகள், அரசி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருக்கிறார். அதே போல ப்ரீத்தாவும் சஹானா, அரசி, பாசமலர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார். இருவரும் சேர்ந்து ஜோடி நம்பர் 1, மானாட மயிலாட உள்ளிட்ட டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று கலக்கி இருக்கிறார். சின்னத்திரையை போல் வெள்ளித்திரையிலும் இருவரின் முகங்களும் ரசிகர்களுக்கு பரிட்சயம் தான். ப்ரீத்தா டும் டும் டும், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். ராகவ் ஒருசில படங்களில் ஹீரோவாகவும், சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஷங்கரின் இயக்கத்தில் ரஜினியுடன் இவர் சேர்ந்து நடித்த எந்திரன் படம் நல்ல ரீச்சை வாங்கி தந்தது.
இந்நிலையில்
ப்ரீத்தா தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். நடிகர் ராகவ் ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கிறார். சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள ‘செவ்வந்தி’ தொடர் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார். இந்த சீரியலில் மகராசி தொடர் புகழ் நடிகை திவ்யா ஸ்ரீதர் ஜோடியாக ராகவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் ராகவ்வை டெலிவிஷனில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.