பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் மூத்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கலந்துக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக் பாஸ் பிரபலமான ரியாலிட்டி கேம் ஷோக்களில் ஒன்று. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்திருக்கிறது. கடந்த சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிந்தது. இதில் நடிகர் ஆரி பட்டத்தை வென்றார்.
இப்போது பிக் பாஸின் அடுத்த சீசனான, பிக் பாஸ் 5 ஜூன் மாதத்தில் துவங்க உள்ளது. எப்போதும் போல பிக் பாஸில் கலந்துக் கொள்பவர்களின் பெயர்கள் இணையத்தில் வலம் வருகின்றன. அதில் முக்கியமான ஒரு மூத்த நடிகரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
KS Ravikumar: ஓடிடி-யில் வெளியாகும் கே.எஸ்.ரவிக்குமார் படம்!
அனந்த் வைத்யநாதன், பொன்னம்பலம், மோகன் வைத்யா, சுரேஷ் சக்ரவர்த்தி போன்ற பல சீனியர்கள் இதுவரை நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் மூத்த நபர்களாக இடம்பெற்றுள்ளனர். அதன்படி பிக் பாஸ் 5 குழு இந்த சீசனுக்கான மூத்த போட்டியாளராக பல்துறை நடிகர் எம்.எஸ்.பாஸ்கரை அழைத்து வர திட்டமிட்டுள்ளதாம். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் தான் நமக்கு உறுதியான தகவல்கள் தெரிய வரும். எம்.எஸ்.பாஸ்கர் கமல்ஹாசனுடன் உத்தம வில்லன் திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்