• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Karthik: காயத்தால் துடித்த நடிகர் கார்த்திக்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Karthik: காயத்தால் துடித்த நடிகர் கார்த்திக்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கார்த்திக்

கார்த்திக்

சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் கார்த்திக், அவரது வீட்டில் உடற்பயிற்சி செய்யும்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார்.

  • Share this:
    உடற்பயிற்சி செய்யும் போது தவறி விழுந்து ஏற்பட்ட காயத்தால் நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகில் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். தற்போது குணசித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து வருகிறார். தீ அவன், அந்தகன் ஆகியப் படங்கள் தற்போது கார்த்திக்கின் கைவசம் உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் கார்த்திக், அவரது வீட்டில் உடற்பயிற்சி செய்யும்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதனால் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த கார்த்திக், உடனடியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டதால், எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது ஸ்கேனில் தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    கார்த்திக்கிற்கு அடிப்பட்ட செய்தி கேட்டு சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: