Home /News /entertainment /

விஜய் டிவி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்!

விஜய் டிவி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்!

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி

மீண்டும் மாறன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க இயக்குநர் முடிவெடுத்துள்ளார். ஆகையால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் சந்துரு நடிக்க உள்ளார்.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அண்ணன் - தம்பி, கணவன் - மனைவி, காதல் ஜோடி, புதுமண தம்பதி என பலவிதவிதமான கான்செப்ட்களில் விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் இளைஞர்களை மிகவும் கவர்ந்த தொடராக உள்ளது.

    எத்தனை தடைகள் வந்தாலும் படித்தே தீருவேன் படித்தே தீர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கும், ஒரு சாதாரண பெண்ணின் போராட்டம் தான் கதையின் மையக்கரு. வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய ஆசிரியை சாரதாவின் உதவியுடன் படிக்க நினைக்கிறார் நாயகி. இடையில் பல சங்கடங்கள், பல போராட்டங்களைக் கடந்து எப்படி படித்து வெற்றி பெறுகிறார் என்பதும் கல்லூரியில் பேராசிரியரும், கல்லூரியின் உரிமையாளருமான ஹீரோவுக்கும் இவருக்கும் காதல் வளர்கிறது என்பதும் கதையின் முக்கிய களங்கள்.

    இந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்கா குமார் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சுவாமிநாதன் என்பவர் நடித்து வருகிறார். மாளவிகா அவினாஷ், பானு பிரகாஷ், ஜனனி அசோக் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

    இந்த சீரியலில் நடித்து வரும் முக்கிய கதாபாத்திரங்கள் வெளியேறுவதும், அவர்களுக்கு பதிலாக புதிய நபர்கள் நடிக்க வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. முதன் முதலில் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வந்த சூர்ய‌ தர்ஷன், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் சீரியலை விட்டு விலகினார். இவருக்கு பதிலாக தான் சுவாமிநாதன் காற்றுக்கென்ன வேலி தொடரின் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

    சீரியலின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான மீனாட்சி என்ற பாத்திரத்தில் நடித்து வந்த நடிகையும் சீரியலில் இருந்து வெளியேறினார். தற்போது மீனாட்சியாக நடிப்பவர் ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை சுஜாதா பஞ்சு தான். அதே போல, ஹீரோயின் படிப்புக்கு ஆதரவாக இருக்கும் சராதா கேரக்டரில் நடித்து வந்த மாளவிகாவும் ஒரு சில காரணங்களால் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். தற்போது சாரதா கதாபாத்திரத்தில் ஜோதி ராய் என்பவர் நடித்து வருகிறார்.

    இந்த சீரியலில் இருந்து ஹீரோயின் ப்ரியங்கா குமாரும், வில்லி அக்ஷிதா அசோக் மட்டும் தான் இதுவரை மாறவில்லை. இந்த தொடரில் இருந்து கடந்த மாதம் மாறன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த புலி ராகவேந்திரன் வெளியேறினார். சமீபகாலமாக இந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும், மாறன் கதாபாத்திரம் விரைவில் தொடரிலிருந்து நீக்க முடிவெடுத்துள்ளதாகவும் ராகவேந்திரன் உருக்கமாக கூறிய வீடியோ வைரலானது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    நடிகர் தனுஷின் பிரமாண்ட வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் இதோ...

    இந்நிலையில் மீண்டும் மாறன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க இயக்குநர் முடிவெடுத்துள்ளார். ஆகையால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் சந்துரு நடிக்க உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலிலும் நடித்துள்ளார். சந்துரு, மாறன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள காட்சிகள் வர உள்ள நாட்களில் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காற்றுக்கென்ன வேலி தொடரில் மாறன் கதாபாத்திரம் இளம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமானது. அதனை சந்துரு நிறைவேற்றுவாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி