Home /News /entertainment /

இந்த வாரம் கலர்ஸ் தமிழில் பரத்தின் நடுவன்!

இந்த வாரம் கலர்ஸ் தமிழில் பரத்தின் நடுவன்!

நடுவன்

நடுவன்

திரைப்படத்தின் மையக்கருவாக காதலும், அன்பும் இருக்கின்றபோது பரபரப்பும், அதிரடி காட்சிகளும் விறுவிறுப்பைக் கூட்டும்.

  தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரபல பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘நடுவன்’ திரைப்படத்தை உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகவுள்ளது. காதல், பயம், துரோகம் மற்றும் பழிவாங்கல் என பல்வேறு உணர்வுகளை சிறப்பாக வெளிக்காட்டும் கதைத்தளம் கொண்ட இந்த அதிரடி த்ரில்லர் திரைப்படத்தைக் காண 2022 பிப்ரவரி 13, இந்த ஞாயிறு அன்று இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.

  இயக்குனராக ஷரன் குமாரின் முதல் திரைப்படமாக நடுவன் வெளிவந்திருக்கிறது. தென்னிந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் பரத் மற்றும் நடிகை அபர்ணா வினோத் முதன்மை கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் கோகுல் ஆனந்த் மற்றும் அருவி பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். கொடைக்கானலில் ஒரு தேயிலைத் தோட்டத்தின் உரிமையாளரான கார்த்திக் என்ற இளைஞனை (நடிகர் பரத்தின் நடிப்பில்) முன்னிறுத்தி கதை நகர்கிறது. தனது மனைவி மது (அபர்ணா வினோத்தின் நடிப்பில்) மீது அக்கறை செலுத்த மற்றும் நேரம் செலவிடுவதற்கு பதிலாக தனது பணிக்கே அதிக முன்னுரிமையை கார்த்திக் வழங்குவதால் திருமண வாழ்க்கையில் பல நேரங்களில் ஏமாற்றத்திற்கு ஆளாகிறார் மது.

  தேயிலை தொழிலகத்தில் புதிதாக பணிக்கு சேரும் குரு (அருவி பாலாவின் நடிப்பில்), கார்த்திக்கிற்காக ஒரு பணியை செய்கின்ற போது, மது (அபர்ணா வினோத்தின் நடிப்பில்), சிவா என்ற நபரோடு (கோகுல் ஆனந்தின் நடிப்பில்) பழகுவதை கண்டறிகிறார். இவர்கள் மூவருக்கும் இடையே ஏற்படும் உறவு கதையை எப்படி திருப்பிகிறது, பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த இக்கதை எதைநோக்கி செல்கிறது என்று காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.

  உலக தொலைக்காட்சி ப்ரீமியர் நிகழ்வாக வெளிவரும் இத்திரைப்படம் ஒளிபரப்பாவது குறித்துப் பேசிய நடிகர் பரத், “கலர்ஸ் தமிழ் போன்ற மக்கள் மனம் கவர்ந்த பிரபல சேனலில் ‘நடுவன்’ வெளியாவது அதிக உற்சாகமளிக்கிறது. ஆர்வத்தை பன்மடங்காக உயர்த்தும் வகையில், ரொமான்ஸ் மற்றும் த்ரில்லர் என்ற இரு பிரிவுகளின் கலவையாக இத்திரைப்படம் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைப்படத்தின் மையக்கருவாக காதலும், அன்பும் இருக்கின்றபோது பரபரப்பும், அதிரடி காட்சிகளும் விறுவிறுப்பைக் கூட்டுகின்ற திரைப்படமாக இது இருப்பதால், வாடிக்கையாளர்களின் ரசனைக்கு இது நிச்சயம் விருந்தாக அமையும்,” என்று கூறினார்.

  தமிழ் சினிமாவின் அடுத்த காதல் ஜோடி... கெளதம் கார்த்திக்-மஞ்சிமாவுக்கு விரைவில் டும் டும் டும்!

  நடிகராக அறிமுகமாகி இயக்குனராக உருவெடுத்திருக்கும் ஷரன் குமார் பேசுகையில், இத்திரைப்படத்திற்காக ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் காலம் நான் பணியாற்றியிருக்கிறேன். ஒரு இயக்குனராக திரையுலகில் நான் அறிமுகமாக வழி வகுத்திருக்கும் நடுவன் திரைப்படம் எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாக எப்போதும் இருக்கும். எனது கனவு செயல்திட்டமான இதை திரைப்பட ரசிகர்களும் நிச்சயமாக ரசிப்பார்கள் என்று நான் கருதுகிறேன்.” என்று கூறினார்.

  ஐஸ்வர்யாவை பிரிந்ததால் நிறைவேறாமல் போன தனுஷின் நீண்ட நாள் கனவு

  2022 பிப்ரவரி 13 ஞாயிறு அன்று இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்வதன் மூலம் சிறப்பான இந்த அதிரடி திரைப்படத்தை கண்டு ரசிக்க தயாராகுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்

  அடுத்த செய்தி