Sun TV: சன் டிவி-யில் ரீ எண்ட்ரியான நடிகர் அசீம் - எந்த சீரியல் தெரியுமா?

நடிகர் அசீம்

சன் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் "பூவே உனக்காக" சீரியலில் இருந்து நாயகனாக நடித்த அருண் சமீபத்தில் விலகினார்.

  • Share this:
பகல் நிலவு சீரியலில் அர்ஜுன் என்ற பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் சின்னத்திரை நடிகர் முகமது அசீம். சன் டிவி-யில் இருந்து விஜய் டிவிக்கு சென்ற அசீம் ஏற்கனவே வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் ஒன்றில் புதிதாக இணைவதன் மூலம் மீண்டும் சன் டிவிக்கு திரும்பி உள்ளார். வாணி போஜனுடன் மாயா, கடைகுட்டி சிங்கம், பிரியமானவள் மற்றும் தெய்வம் தந்த வீடு உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்துள்ளவர் இவர். இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி சன் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் "பூவே உனக்காக" சீரியலில் இருந்து நாயகனாக நடித்த அருண் சமீபத்தில் விலகினார்.

இது தொடர்பாக இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருந்த அவர் விலக்கியதற்கான காரணம் என்ன என்பதை சொல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் சன் டிவி நிர்வாகம், ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அருணின் இந்த முடிவால் ஏமாற்றமடைந்திருந்த ரசிகர்கள் அடுத்து இந்த சீரியலின் ஹீரோவாக நடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். இந்நிலையில் ஏற்கனவே சன் டிவி சீரியல்களில் நடித்திருந்த நடிகர் அசீம், அருண் நடித்து வந்த கதிர் பாத்திரத்தை ஏற்று இனி அசீம் நடிக்க உள்ள தகவல் வெளியாகி உள்ளது. சன் மியூசிக் சேனலில் ஆங்கராக சின்னத்திரை வாழ்க்கையை துவக்கிய அசீம், பின்னர் சன் டிவி-யில் ஒளிபரப்பான "பிரியமானவள்"சீரியலில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் பின்னரே பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட விஜய் டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இந்த இரு சீரியல்களிலும் அசீமிற்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் ஷிவானி நடித்தார். மேலும் இவர்கள் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் ஜோடியாக பங்கேற்று ரசிகர்களை மேலும் கவர்ந்தனர். இது அசீமின் குடும்ப வாழ்க்கையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.

Also read... Anushka Shetty: புதிய படங்களில்லை... ஸ்டேன்ட் அப் காமெடியனுக்கு ஜோடியாகும் அனுஷ்கா?

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் அசீம் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் ஷிவானியும் அதில் இருந்ததால் அசீம் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு பின் அந்த முடிவு கைவிடப்பட்டதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இதனிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பிக்பாஸ் சீசன் 5 செப்டம்பருக்கு பிறகு துவங்க உள்ளது. இதில் நிச்சயம் அசீம் பங்கேற்பார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பூவே உனக்காக சீரியலில் அடியெடுத்து வைப்பதன் மூலம் சன் டிவி-க்கு அவர் திரும்பி உள்ளதாக தெரிகிறது. பூவே உனக்காக சீரியலில் இன்று முதல் அசீம் நாயகனாக நடிக்கும் காட்சிகள் கடந்த 2 நாட்களாக படமாக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகி உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: