ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சீரியல் நடிகர் அர்னவுக்கு மேலும் சிக்கல்... ஜாமீன் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்!

சீரியல் நடிகர் அர்னவுக்கு மேலும் சிக்கல்... ஜாமீன் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்!

நடிகர் அர்னவ்

நடிகர் அர்னவ்

நடிகர் அர்னவ் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சின்னத்திரை நடிகர் அர்னவ் 15 நாள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    சன் டிவி செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதரும், விஜய் டிவி செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் அர்னவ்வும் திருமணம் செய்துக் கொண்டதாக இணையத்தில் செய்திகள் வெளியாகின. திருமணத்தை அறிவித்த சில வாரங்கள் கழித்து நிலையில், தனது கணவர் அர்னவ் தன்னை தவிர்த்து வருவதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் திவ்யா. அதோடு கணவர், கர்ப்பமாக இருக்கும் தன்னை கீழே தள்ளியதால், கரு கலைந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.

    காதல்.. கல்யாணம்.. கைது! செல்லம்மா சீரியலில் இருந்து நடிகர் அர்ணவ் நீக்கம்?

    இது குறித்து பேசிய அர்னவ், கடந்த 5 வருடங்களாக திவ்யா தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும், கணவருடன் இருந்துக் கொண்டே விவாகரத்து ஆகிவிட்டது என பொய் சொல்லி தன்னை காதலித்ததாகவும், அவருக்கு பெண் குழந்தை இருந்ததையும் மறைத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.இதற்கிடையே திவ்யாவை அடித்து துன்புறுத்தியாக அளித்த புகாரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் அர்னாவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை பெற்று கொண்ட நிலையில் அர்னவ் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    இதையடுத்து கடந்த வாரம் பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் போலீசார் அர்னவை கைது  செய்தனர். நீதிமன்ற உத்தரவின் படி அர்னவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அம்பத்தூர் சிறப்பு நீதிமன்ற மாஜிஸ்திரேட் பரம்வீர் முன்னிலையில் இன்று நடிகர் அர்னவ் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். விசாரணைக்கு பின்பு முன்ஜாமின் மனுவை நிராகரித்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial, Vijay tv