ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் சீரியலுக்கு திரும்பிய அர்னாவ். போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு சொன்ன தகவல்!

மீண்டும் சீரியலுக்கு திரும்பிய அர்னாவ். போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு சொன்ன தகவல்!

நடிகர் அர்னாவ்

நடிகர் அர்னாவ்

சீரியல் நடிகர் அர்னாவ் மீண்டும் செல்லம்மா சீரியலுக்கு திரும்பி இருக்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  செல்லம்மா சீரியலுக்கு மீண்டும் திரும்பியுள்ளார் நடிகர் அர்னாவ். இதுக் குறித்த போஸ்ட் ஒன்றை அர்னாவ் தனது இன்ஸ்டவில் வெளியிட்டுள்ளார்.

  சன் டிவி, விஜய் டிவி சீரியல்களில் நடித்து புகழடைந்தவர் நடிகர் அர்னாவ். இவர் தற்போது செல்லம்மா சீரியலில் சித்து என்ற ரோலில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக அன்ஷிதா செல்லமா என்ற ரோலில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வருவதாக அவர் பேச்சை கேட்டு அர்னாவ் தன்னை அடித்ததாக அர்னாவின் மனைவி திவ்யா ஸ்ரீதர் போலீஸில் புகார் கொடுத்தார். திவ்யாவும் சீரியல் நடிகை தான். தற்போது அவர்  சன் டிவி செவ்வந்தி சீரியலில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு மகராசி தொடரில் நடித்து இருந்தார்.

  ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வெளியேறிய அசல் கோலார்.. பிக் பாஸ் குழு கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  திவ்யாவுக்கு அர்னாவ் 2வது கணவர் ஆவார். ஏற்கெனவே இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் அர்னாவும் திவ்யாவும் ஒரே சீரியலில் சேர்ந்து நடிக்க அதன் மூலம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலிக்க தொடங்கி இருக்கிறார்கள். பின்பு திருமணம் ஆகாமலே லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார்கள் என கூறப்படுகி்றது. இந்நிலையில் திவ்யா கர்ப்பமானதால் அவரை சமீபத்தில் அர்னாவ் திருமணம் செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

  பிக் பாஸ் ஆயிஷா ஏற்கெனவே திருமணம் ஆனவர்.. போட்டுடைத்த முன்னாள் காதலன்!

  நடுவில் அன்ஷிதாவுடன் அர்னாவ் நெருக்கமாக பழகியதால் வீட்டில் சண்டை வெடித்து இருவரின் விஷயமும் போலீஸ் புகார் வரை சென்றது. இதையடுத்து திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் போலீசார் அர்னவை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் படி அர்னவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது. அவருக்கு முன் ஜாமீன் கிடைப்பது கஷ்டம் என்றும் சொல்லப்பட்டது. இதனால் செல்லம்மா சீரியலில் அவருக்கு பதில் வேறொருவர் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவின. இந்நிலையில் கடந்த வாரம் அர்னாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
   
  View this post on Instagram

   

  A post shared by Arnaav Official (@arnaavactor)  இதையடுத்து நேற்றைய தினம் அர்னாவ் மீண்டும் செல்லம்மா சீரியலுக்கு திரும்பி இருக்கிறார். சித்து லுக்கில் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்து அதில் “காதலோடு வாழும் வாழ்க்கை ஒருபோதும் சலிக்காது” என கேப்ஷன் கொடுத்து  கம்பேக் டூ சீரியல் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv