• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’படங்கள் தோல்வி, சொத்துகளை இழந்தேன்’ - ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மறுப்பக்கம்!

’படங்கள் தோல்வி, சொத்துகளை இழந்தேன்’ - ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மறுப்பக்கம்!

அர்ஜூன்

வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான நடிகரான அர்ஜூன், சர்வைவர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். நடிகராக ஹிட் அடித்த அர்ஜூன் தொகுப்பாளராகவும் ஹிட் அடிப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அர்ஜூன் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான நடிகரான அர்ஜூன், சர்வைவர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். நடிகராக ஹிட் அடித்த அர்ஜூன் தொகுப்பாளராகவும் ஹிட் அடிப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதுவரை இந்த ஷோவில் இருந்து இரண்டு பேர் எமிலினேட் ஆகியிருக்கின்றனர். முதன்முதலாக நடிகை சிருஷ்டி வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர் ஷோவில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

  • Share this:
சினிமாவில் படங்கள் தோல்வியடைந்ததால், சொத்துக்களை இழந்து பல சவால்களை எதிர்கொண்டதாக நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் ரியாலிட்டி ஷோவை ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த ஷோவின் இன்றைய புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், தன்னுடைய அரம்பகால சினிமா அனுபவங்களை ஆக்ஷன் கிங், போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். சினிமாவில் தனக்கென மார்க்கெட் இருந்தாலும், குறுப்பிட்ட சில காலங்களில் தான் நடித்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்ததாக தெரிவித்துள்ள அர்ஜூன், பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டதாக கூறியுள்ளார்.

பின்னர், தானே சொந்த படங்கள் தயாரிக்க முடிவு செய்து படங்களை தயாரித்தபோது பண நெருக்கடிகளை சந்தித்துள்ளார். சூட்டிங் விறுவிறுபாக நடைபெற்று, கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கும்போது கையில் பணம் இருக்காது எனவும், அந்த நேரத்தில் தங்களுக்கு பெங்களுருவில் சொந்தமாக இருந்த வீட்டை விற்று தாய் பணம் அனுப்பியதாகவும் அர்ஜூன் தெரிவித்துள்ளார். தாய் கொடுத்த சப்போர்ட் மற்றும் தைரியத்தால் மட்டுமே தான் இந்தளவுக்கு உயர்ந்து, வெற்றிகளை பெற்றதாகவும் அர்ஜூன் கூறியுள்ளார்.



இன்று வெளியாகியிருக்கும் அந்த புரோமோவில், " தமிழ் சினிமாவில் எனக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருந்தது. ஆனால், குறிப்பிட்ட சில காலங்களில் திடீரென படங்கள் தோல்வியை சந்தித்தன. எனக்கு என்ன செய்வதென்றே தெரியல. அந்த நேரத்தில் நானே படங்களை டைரக்ட் செஞ்சேன். சொந்தமாக படங்களை இயக்கினேன். இதனால், என்னுடைய சொத்துகள் முழுவதையும் இழந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு ஒரே ஒரு சொத்து மட்டும் தான் இருந்தது. அதனையும் விற்றுவிட்டேன். ஆனால், படத்தை முடிக்க பணம் தேவை இருந்தது.

அப்போது, பெங்களுரில் எங்களுக்கு சொந்தமான ஒரே ஒரு வீடு மட்டும் இருந்தது. என்னோட அம்மா, அதையும் விற்பனை செஞ்சி எனக்கு கொடுத்தாங்க" என தன்னுடைய சோகமான மறுப்பக்கங்களை அர்ஜூன் போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அர்ஜூனைப் பொறுத்தவரை ஆக்ஷன் கிங் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு காரணம், அவருடைய படத்தில் சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் தூள் கிளப்பும்.

Also read... சர்வைவர் எலிமினேஷனுக்குப் பிறகு இந்திரஜா சங்கர் வெளியிட்ட உருக்கமான பதிவு!

அதற்கேற்ப தன்னுடைய உடலையும் பிட்னஸாக இன்றளவும் வைத்திருக்கிறார். ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளார். அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆக்ஷன் கிங் என்ற பட்டத்துக்கு ஏற்ப சர்வைவர் ஷோவையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை இந்த ஷோவில் இருந்து இரண்டு பேர் எமிலினேட் ஆகியிருக்கின்றனர். முதன்முதலாக நடிகை சிருஷ்டி வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர் ஷோவில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இந்த வாரம் யாராக இருக்கும்? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: