ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தாலி கழட்டி வச்சிட்டு நடிக்க மாட்டேன்.. சீரியல் நடிகையின் அதிரடி பதில்!

தாலி கழட்டி வச்சிட்டு நடிக்க மாட்டேன்.. சீரியல் நடிகையின் அதிரடி பதில்!

சீரியல் நடிகை வித்யா

சீரியல் நடிகை வித்யா

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வித்யா தாலியை கழட்டி வைத்துவிட்டு நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  எந்த சமயத்திலும் தாலி கழட்டி வச்சிட்டு நடிக்க மாட்டேன் என்று சன் டிவி சீரியல் நடிகை வித்யா மோகன் தெரிவித்துள்ளார்.

  வள்ளி நெடுந்தொடர் மூலம் அறிமுகமாகி, ரசிகர்களை தன் வசமாக்கிக்கொண்டவர் வித்யா மோகன். மலையாள வரவான இவர் ஒருசில தமிழ் படங்களில் நடித்தார். பின்பு சின்னத்திரை பக்கம் சென்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்பரப்பான வள்ளி தொடரில் பார்வையற்ற பெண், ஆண் வேடம் என வித்தியாசமான  கெட்-அப்களில் நடித்து கைத்தட்டல்களை அள்ளினார். தற்போது அபியும் நானும் சீரியலில் மீனா என்ற ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது.

  பிக் பாஸ் தாமரை செல்வி வீடா இது? வாயடைத்து போன ரசிகர்கள்!

  தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் சின்னத்திரையில் வித்யா லீட் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒருபக்கம் பர்சனல் லைஃப் இன்னொரு பக்கம் கெரியர் என பேலன்ஸ் செய்து சென்னை - கேரளா என பயணித்துக் கொண்டிருக்கிறார். இவரின் கணவர் வினு மோகனும் நடிகர் தான். கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வித்யா இன்ஸ்டாவில் அதிகம் பகிர்வார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Vidya Vinu Mohan (@vidyavinumohan)  இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வித்யா தாலியை கழட்டி வைத்துவிட்டு நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் அந்த புராஜெக்ட் வேண்டாம் என கூறிவிடுவேன் என தெரிவித்துள்ளார். அது தனக்கு செண்டிமெண்ட் எனவும் கணவர் கட்டியது ரொம்ப ஸ்பெஷல், எனக்கு அவர் போட்ட முதல் செயின் எனவும் அந்த பேட்டியில் வித்யா கூறி இருக்கிறார். அவர் அணிந்திருக்கும் கேரளா தாலியையும் வித்யா பேட்டியில்  காண்பிக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வித்யாவின் பதிலை ரசித்து சூப்பர் என கூறியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial