பிரபல சின்னத்திரை ஜோடியான ராஜ்கமல் - லதா ராவ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ஷூட்டிங்காக லட்சக்கணக்கில் செலவு செய்து பிரம்மாண்ட வீட்டை கட்டியுள்ளனர். இவர்கள் தங்களது யூடியூப் சேனலில் ஏற்கெனவே ஷூட்டிங் வீட்டை ஹோம் டூர் வீடியோவாக வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க, மீண்டும் அவர்களின் ஹோம் டூர் வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
வெள்ளித்திரை - சின்னத்திரை இரண்டிலுமே ராஜ் கமல் - லதா ராவ் ஜோடி பயங்கர ஃபேமஸ். எல்லா பொது இடங்களிலும் இவர்கள் இருவரும் ஒரே நிறத்தில் தான் ஆடை அணிந்து இருப்பார்கள். அதனாலேயே சின்னத்திரையில் இந்த ஜோடியை பலரும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். காதலித்த நாள் தொடங்கி, திருமணம் ஆகி இரண்டு 2 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பின்பும் இவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து இன்னும் மாறவில்லை. ராஜ் கமல் சின்னத்திரையில் நடித்தார் பின்பு வெள்ளித்திரையில் ஒருசில படங்களில் நடித்தார்.
7 பக்கத்திற்கு கடிதம்.. மகளால் உடைந்து அழுத விஜய் டிவி ஆங்கர் அர்ச்சனா!
இப்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும்
அபியும் நானும் சீரியலில் டிரைவர் சரவணன் ரோலில் நடிக்கிறார். அதே போல் லதா ராவ் தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாவம் கணேசன் சீரியலில் நடித்து வருகிறார். அதுபோக திரைப்படங்களில் அண்ணி, அக்கா ரோல் மற்றும் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதுப்போக இருவரும் தங்களின் மகள்களுடன் சேர்ந்து தனியாக யூடியூப் சேனலும் நடத்தி வருகின்றனர்.
இந்த யூடியூப் சேனலில் தான் 3 மாதத்துக்கு முன்பு புதியதாக கட்டிய வீட்டை ராஜ் கமல் - லதா ராவ் ரசிகர்களுக்கு காட்டினர். லட்சக்கணக்கில் செலவு செய்து இந்த வீட்டை பிரம்மாண்டத்தின் உச்சமாக கட்டி முடித்துள்ளனர். இந்த வீட்டின் கிரகபிரவேசத்திற்கு இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், தம்பி ராமையா என பல சினிமா பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். இந்த வீட்டை சினிமா ஷூட்டிங்காக மட்டுமே பார்த்து பார்த்து கட்டி இருக்கின்றனர். 2 பெரிய ஹால், 4 பெட் ரூம், கார் பார்க்கிங், கிச்சன், பூஜை அறை என எல்லாவற்றிலும் பிரம்மாண்டம். இவர்களின் ஷூட்டிங் வீடு இப்போது இணையத்தில் பயங்கர வைரல். எல்லா யூடியூப் சேனலிலும் இதுக் குறித்த வீடியோக்கள், பேட்டிகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.