Home /News /entertainment /

மறுபடியும் அழகான பெண் குழந்தை.. மகிழ்ச்சி வெள்ளத்தில் சன்டிவி சீரியல் பிரபலம்!

மறுபடியும் அழகான பெண் குழந்தை.. மகிழ்ச்சி வெள்ளத்தில் சன்டிவி சீரியல் பிரபலம்!

சன் டிவி சீரியல் நடிகர்

சன் டிவி சீரியல் நடிகர்

Serial Actor Shyam Ji | இவருக்கு திருமணம் ஆகி ஏற்கெனவெ ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.

    சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அபியும் நானும் தொடரில் ரகு ரோலில் நடிக்கும் நடிகர் ஷ்யாம் ஜிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த அழகான தருணத்தை தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் ஷ்யாம் பகிர்ந்துள்ளார்.

    வெள்ளித்திரை நடிகர்களை காட்டிலும் சின்னத்திரை நடிகர்கள் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கின்றனர். அவர்களை ஃபாலோ செய்வதில் ரசிகர்கள் அதிக விருப்பம் கொள்கின்றனர். அதற்கு காரணம், தினமும் அவர்களை டிவியில் பார்ப்பது, சீரியல்களில் அவர் நடிக்கும் ரோல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போவது தான். அந்த வகையில் சின்னத்திரை நடிகர் ஷ்யாம் ஜி ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரையும் மதிப்பையும் சம்பாதித்து இருக்கிறார். ஆரம்பத்தில் இவரை ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் செம்பருத்தி சீரியலில் பார்க்க முடிந்தது. அதில் ஆதியின் நண்பராக நடித்து இருப்பார்.

    இதையும் படிங்க.. காணாமல் போன ரோஜா குழந்தை.. துரைக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

    அதற்கு அடுத்து, சந்திரலேகா சீரியலில் நடித்தார். இப்போது சன் டிவியில் பிரைம் டைமிங்கில் ஒளிப்பரப்பாகும் அபியும் நானும் சீரியலில் ரகு என்ற ரோலில் நடித்து வருகிறார். இந்த ரோல் மூலம் இவருக்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது.சீரியலில் இவரின் நடிப்பை பாராட்டி ரசிகர்கள் பல கருத்துக்களை சோஷியக் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஷ்யாம் ஜிக்கு 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் ஷ்யாம் பகிர்ந்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Shyam Ji (@shyamji_s)






    இவருக்கு திருமணம் ஆகி ஏற்கெனவெ ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை அழகான புகைப்படத்துடன் ஷ்யாம் ஷேர் செய்துள்ளார். புதியதாக பிறந்த குழந்தையை கையில் ஏந்தியப்படி அவரின் அருகில் மூத்த மகள் நிற்கிறாள். இத்துடன் “blessed with girl baby again" என்ற கேப்டசனையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சின்னத்திரை நடிகர், நடிகைகள், ரசிகர்கள் என பலரும் ஷ்யாமுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial, TV Serial Promos

    அடுத்த செய்தி