Home /News /entertainment /

அபி டெய்லர் சீரியல் இனி டி.ஆர்.பியில் கலக்கும்.. புதுசா வந்திருக்கும் பிரபலம் அப்படி!

அபி டெய்லர் சீரியல் இனி டி.ஆர்.பியில் கலக்கும்.. புதுசா வந்திருக்கும் பிரபலம் அப்படி!

அபி டெய்லர்

அபி டெய்லர்

ரிவ்யூ ராஜா" என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக தனித்துவமான முறையில் தொகுத்து வழங்கி மக்களிடம் மிகவும் பிரபலமானவர் பப்பு.

    கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அபி டெய்லர்' தொடரில் மதன் மற்றும் ரேஷ்மா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக ஜீதமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட்டான சீரியல்களில் ஒன்று தான் பூவே பூச்சூடவா. இதன் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் தான் நடிகை ரேஷ்மா. மேலும் இந்த சீரியலில் ஒன்றாக மதன் இணைந்து நடித்திருந்தார்.

    பின்னர் அந்த சீரியல் முடியும் தருவாயில் இருந்தபோது தான் மதன் மற்றும் ரேஷ்மா ஜோடி தங்களது காதலை ரசிகர்களுக்கு வெளிப்படையாக அறிவித்தனர். பின்னர், இருவரும் இணைந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் அபி டெய்லர் சீரியலில் நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்களிலேயே 'அபி டெய்லர்' சீரியலுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

    ஆனாலும், மற்ற சின்னத்திரை ஹிட் சீரியல்களுடன் ஒப்பிடும் போது 'அபி டெய்லர்' நிகழ்ச்சி டிஆர்பியில் பெரிதாக இடம் பிடிக்கவில்லை. இதனையடுத்து இந்த சீரியலின் சுவாரசியத்தை அதிகரிக்க தொடர்ந்து பல பிரபல நடிகர்களை களமிறக்கி வருகிறது சீரியல் குழு. சமீபத்தில் தான் இந்த சீரியலில் நடிகர் ஜெய் ஆகாஷ் மற்றும் அதனை தொடர்ந்து சாந்தினி பிரகாஷ் ஆகியோர் புதிதாக இணைந்தனர்.

    இதையும் படிங்க.. குஷ்பு முதல் ஸ்மிருதி இரானி வரை 2021ல் உடல் எடையை குறைத்த அரசியல் பிரபலங்கள்!

    இந்நிலையில் மற்றொரு சின்னத்திரை பிரபலமும் இணைந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை வீஜே பப்பு தான் அது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பப்பு தனது பேச்சாற்றல் மூலம் விஜேவாக விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சிறுவயதில் மிகவும் துருதுருவென சேட்டைகள் செய்துகொண்டிருந்த இவரை பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா இவருக்கு பப்பு என பெயர் சூட்டி அழைத்தும் வந்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Vj Pappu (@vjpappu)






    ஆரம்ப கட்டத்தில் பல வாய்ப்புகள் இவருக்கு மறுக்கப்பட்டாலும் தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்து விடா முயற்சித்து "ரிவ்யூ ராஜா" என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக தனித்துவமான முறையில் தொகுத்து வழங்கி மக்களிடம் மிகவும் பிரபலமானார். யூடியூபில் தொடங்கி விஜய் டிவி வரை பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பப்பு, சமீப காலங்களில் நடிக்கவும் ஆரம்பித்துள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி, சின்னத்தம்பி மற்றும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே உள்ளிட்ட சீரியல்களிலும் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

    இதையும் படிங்க.. ஆல்யா மானசாவா? ஷபானாவா? அதிக ரசிகர்கள் வைத்திருக்கும் சீரியல் நடிகைகள் யார்?

    சின்னத்திரையைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் ஜொலிக்கயிருக்கும் பப்பு இப்பொழுது ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி இருக்க படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இவர் தற்போது 'அபி டெயல்ர்' சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சீரியலில் இவர் ஆட்டோக்காரனாக நடிக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி