Home /News /entertainment /

எல்லாத்துக்கும் அம்மா தான் காரணம்.. அபி டெய்லர் சீரியல் ரேஷ்மா சொன்ன விஷயம்!

எல்லாத்துக்கும் அம்மா தான் காரணம்.. அபி டெய்லர் சீரியல் ரேஷ்மா சொன்ன விஷயம்!

அபி டெய்லர் ரேஷ்மா

அபி டெய்லர் ரேஷ்மா

Actress Reshma Muralidharan: ரேஷ்மாவின் அம்மா உண்மையில் ஒரு டெய்லர் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதனாலேயே, ரேஷ்மா இந்த சீரியலில் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அபி டெய்லர்' தொடரில் மதன் மற்றும் ரேஷ்மா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக ஜீதமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட்டான சீரியல்களில் ஒன்று தான் பூவே பூச்சூடவா. இதன் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் தான் நடிகை ரேஷ்மா முரளிதரன்.

    மேலும் இந்த சீரியலில் மதன் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார். பின்னர் அந்த சீரியல் முடியும் தருவாயில் இருந்தபோது தான் மதன் மற்றும் ரேஷ்மா ஜோடி தங்களது காதலை ரசிகர்களுக்கு வெளிப்படையாக அறிவித்தனர். பின்னர், இருவரும் இணைந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் அபி டெய்லர் சீரியலில் நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஒரு சீரியல் ஹிட்டாவதற்கு அதில் வரும் நடிகர்களும் ஒரு காரணம். அந்த வகையில், நடிகை ரேஷ்மாவுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

    நடிகை ரேஷ்மா கேரளாவில் உள்ள கோட்டயத்தில் பிறந்தவர். மேலும் இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் தான் முடித்தார். ரேஷ்மா முரளிதரன் 2015 ஆம் ஆண்டு ஃபேஸ் ஆஃப் சென்னை அழகிப் போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களுள் வந்திருந்தார்.   இதனையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் போட்டியின் 2 வது ரன்னர் அப் இடத்தைப் பிடித்தார். இதோடு மட்டுமின்றி ரேஷ்மா முரளிதரன் யூடியூப் சேனல் ஒன்று நடத்திவரும் நிலையில், குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் அடிக்கடி பள்ளிக்கு விருந்தினராக அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க.. எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிட்டாரே… அதிர்ச்சியைக் கிளப்பும் புகைப்படம்

    நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர், ஜீ தமிழில் ’ டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0' என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதையடுத்து பூவே பூச்சூடவா சீரியலில் நடித்தார். ரசிகர்கள் மத்தியில் இவரை மிகவும் பிரபலப்படுத்திய சீரியல் இதுதான் என்று ஊருக்கே தெரியும். இந்த நிலையில், ஒரு டெய்லர் பெண்ணாக நடித்து வரும் ரேஷ்மாவின் குடும்ப பின்னணி குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ரேஷ்மாவின் அம்மா உண்மையில் ஒரு டெய்லர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

    இதனாலேயே, ரேஷ்மா இந்த சீரியலில் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சிறந்த நடன கலைஞரான ரேஷ்மா முரளிதரன், சமூக ஊடகங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்துவருகிறார். மேலும் அவர் விதவிதமான ஸ்டைல் அண்ட் லுக்ஸ் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial

    அடுத்த செய்தி