செய்திவாசிப்பாளராக பணியாற்றிய அபிநவ்யா, சின்னத்திரையில் அடியெடுத்து வைத்து முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதியாகவும், கண்மணி தொடரில் சினேகா கதாப்பாத்திரங்களிலும் நடித்தார். இரு கதாப்பாத்திரங்களிலும் தனது நடிப்பு திறமையால் பலரது கவனத்தை ஈர்த்த அபி நவ்யா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம்பேசுதடி தொடரில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த சேனல் சீரியலில் நடிக்கும் தீபக்குமாரை கடந்த ஓராண்டாக காதலிக்கும் அவர், அண்மையில் தங்களது காதல் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.அப்போது தான் இவர்களின் காதல் அனைவருக்கும் தெரியவந்தது. நடிகர் தீபக்குமாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவர் எழுதிய பதிவில், கடந்த ஓராண்டாக தன்னுடைய பெஸ்டாக இருந்ததற்கு நன்றி எனக் கூறியுள்ளார். "உன்னை எப்போது காதலித்து கொண்டே இருக்க வேண்டும், உன்னுடனேயே இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். உன்னை நன்றாக பார்த்துக்கொள், எப்போதும் மிகவும் மகிழ்ச்சியாக இரு, இன்றைய நாளில் கடந்த ஓராண்டாக நான் இணைந்து பயணிக்க தொடங்கிய நாளை எட்டியுள்ளோம்.
மகிழ்ச்சியாக உள்ளது. உன்னை காதலிக்கப் பெற்றது என்னுடைய வரம், இதேபோல் என்றென்றும் இருக்க வேண்டும்" என தன்னுடைய காதலையும், அன்பையும், இதயப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்துக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.காதலியான அபிநவ்யா, அன்பை பரிமாறிவிட்டதால், காதலர் தீபக்குமார் சும்மா விடுவாரா என்ன? அவரும் தன் பங்குக்கு காதலியை புகழ்ந்து இன்ஸ்டாகிராமில் காதலை வார்த்தைகளால் விவரித்துள்ளார். தன்னுடைய பதிவில் "இந்த ஓராண்டு பயணம்போல் இன்னும் பல ஆண்டுகள் வர இருக்கிறது, என்றென்றும் உன்னை காதலிப்பேன்" என தெரிவித்தார். அப்போதே, இருவரும் விரைவில் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர்.
அவர்களின் விருப்பதை நிறைவேற்றும் விதமாக அபிநவ்யா - தீபக்குமாருக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அந்த வீடியோவை அபிநவ்யா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திருமண தேதியும் முடிவாகிவிட்டதால், விரைவில் டும் டும் கொட்ட உள்ளது. ஏற்கனவே, பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, அனிதா சம்பத், திவ்யா துரைசாமி என செய்திவாசிப்பாளராக பணியைத் தொடங்கி
சின்னத்திரை மற்றும் வெள்ளிதிரையில் நுழைந்தவர்கள் வரிசையில் தற்போது அபி நவ்யாவும் இடம்பிடித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தீபக்கைப் பொறுத்தவரை
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் நவீன் கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பின்னர், என்றென்றும் புன்னகை சீரியலில் லீட் ரோலில் நடித்தார். அவரின் நடிப்பு சின்னத்திரையில் பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.