• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • ”நான் திரும்ப வருவேன் டா” ஹேட்டர்ஸ்-க்கு ரிப்ளை கொடுத்த பிக் பாஸ் அபிஷேக் ராஜா!

”நான் திரும்ப வருவேன் டா” ஹேட்டர்ஸ்-க்கு ரிப்ளை கொடுத்த பிக் பாஸ் அபிஷேக் ராஜா!

அபிஷேக் ராஜா

அபிஷேக் ராஜா

” ஹேட்டர்ஸ் என்ற வார்த்தையையே தவிர்க்க நினைக்கிறேன்”

 • Share this:
  பிக்பாஸ் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ள அபிஷேக், தன்னை வெறுப்பவர்களுக்கு பதில் கூறிய பழைய வீடியோ ஒன்று சூழ்நிலைக்கேற்றவாறு தற்போது நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது

  தமிழ் ரசிகர்களுக்கு பெரிதும் விருப்பமான ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றிகரமாக 3 வாரங்களை கடந்துள்ளது. முன்னதாக இரண்டாம் வாரத்தில் மலேசிய தமிழ் பெண்ணான நாடியா சாங் எலிமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், நெட்டிசன்கள் மற்றும் பிக்பாஸ் ரசிகர்களால் பெரிதும் ரோஸ்ட் செய்யப்பட்டு வந்த பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா கடந்த வாரத்தில் எலிமினேட் ஆகி போட்டியில் இருந்து வெளியேறினார். 18 பேருடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 5-ல் எலிமினேட் சுற்றுக்கு முன்னதாகவே திருநங்கை நமீதா மாரிமுத்து வெளியேறிய நிலையில், தற்போது 15 பேருடன் பிக்பாஸ் சீசன் 5 தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  இதனிடையே பிக்பாஸில் பங்கேற்று பல தரப்பினரின் வெறுப்பை சம்பாதித்துள்ளதாக கருதப்படும் யூடியூபர் அபிஷேக் ராஜா, வெறும் யூடியூபர் மட்டுமல்ல. சினிமா விமர்சகர் மற்றும் விஜே ஆவார். ஏராளமான சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து பல சர்ச்சை மற்றும் விமர்சனங்களை ஏற்கனவே சந்தித்தவர். பிக்பாஸில் இவர் நுழைவதற்கு முன்பே இவருக்கு ஹேட்டர்கள். காரணம் மேலே சொன்னது போல சர்ச்சையாக பேசுவது மற்றும் தனது பேச்சின் மூலம் மற்றவர்களை இன்ஃப்ளுயன்ஸ் செய்ய நினைப்பதுமே இவர் பலரது வெறுப்பை சம்பாதிக்க காரணமாக இருக்கிறது.

  இந்நிலையில் இதே நடத்தையால் தற்போது பிக்பாஸ் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ள அபிஷேக், தன்னை வெறுப்பவர்களுக்கு பதில் கூறிய பழைய வீடியோ ஒன்று சூழ்நிலைக்கேற்றவாறு தற்போது நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் அபிஷேக் பேசியிருப்பதாவது, "என் மீது கூறப்படும் ஆக்கபூர்வ விமர்சனங்கள், வெறுப்பு மற்றும் குற்றச்சாட்டுகளுக்காக இன்றுவரை என்னை நான் தற்காத்து கொள்ள நினைக்கவில்லை. குறிப்பாக நான் அதை செய்ய விரும்பவில்லை, செய்யவும் மாட்டேன். ஆனால் ஒரு தனி மனிதனாக இந்த உலகில் சேர்ந்து வாழ முயற்சிக்கிறேன்.

  விமர்சனங்களை எதிர்கொண்டு இன்னும் என் வேலைகளை சிறப்பாக செய்யவே முயற்சிக்கிறேன். நான் சாதிக்க இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பது எனக்கு தெரிகிறது. எனினும் நான் ஒரு விவாத பொருளாக மாறுவதை பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. மக்களிடம் உள்ள என்னை பற்றிய வெவ்வேறு கண்ணோட்டங்களே விமர்சனங்களாக வெளிவரும் நிலையில், என்னை நான் தற்காத்து கொள்ள நினைத்தால் அது நான் தவறானவன் என்பதை நானே நிரூபிப்பது போலாகிவிடும்.

  முதல் நாளே கன்டெண்ட் நாயகன் அபிஷேக் இல்லாமல் தவிக்கும் பிக் பாஸ் வீடு!

  எதிர்மறை விமர்சனங்களை புறக்கணித்து செல்லுங்கள் என்பது பெரிய சினிமா ஸ்டார்களுக்கு ஒர்கவுட் ஆகும். என்னை போன்றவர்கள் எதிர்மறை விமர்சனங்களை ஏற்று கொள்ள வேண்டும். வாழ்க்கையில் காணப்படும் நிலையற்ற தன்மைகளை மற்றும் சவால்களை எப்போதும் நான் விரும்புகிறேன். எனக்கு பிடித்ததை நான் செய்வதை யாராலும் தடுக்க முடியாது. ஹேட்டர்ஸ் என்ற வார்த்தையையே தவிர்க்க நினைக்கிறேன். எனவே என்னை பாராட்டும் மற்றும் வெறுத்து விமர்சிக்கும் அனைவருக்குமே நன்றி. உங்களுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி, சுவாரஸ்யமான தளத்தில் பணியாற்றும் நான் எப்போதும் ரசிகர்களுக்கு உண்மையாக இருக்கவே விரும்புகிறேன் என்று கூறி இருக்கிறார் அபிஷேக்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: