ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முன்னாள் காதலி பற்றி நாமினேஷனில் ஓபனாக பேசிய நிரூப் நந்தகுமார்!

முன்னாள் காதலி பற்றி நாமினேஷனில் ஓபனாக பேசிய நிரூப் நந்தகுமார்!

நிரூப் - அபிராமி

நிரூப் - அபிராமி

பிக் பாஸ் அல்ட்டிமேட் ஷோவில் முதல் நாளே நாமினேஷன் நடைபெற்றது. அப்போது நிரூப், அபிராமி வெங்கடாசலத்தை நாமினேட் செய்வதாக குறிப்பிட்டார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சின்னத்திரையில் பிரம்மாண்டமான மற்றும் மிக பிரபலமான ரியாலிட்டி ஷோவான 'பிக் பாஸ் தமிழ்' நிகழ்ச்சியின் முதல் OTT பிரத்யேக சீசன் 'பிக் பாஸ் அல்ட்டிமேட்' கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கியது. ஸ்டார் விஜய் டிவி மூலம் சின்னத்திரையில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய உலகநாயகன் நடிகர் கமல்ஹாசனே Bigg Boss Ultimate ஷோவையும் தொகுத்து வழங்குகிறார். பிரபல OTT பிளாட்ஃபார்மாக இருக்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24*7 லைவ் ஸ்ட்ரீமிங்கில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் அல்ட்டிமேட்.

இந்த புத்தம் புதிய பிக்பாஸ் ஷோவில் கடந்த 5 பிக்பாஸ் சீசன்களில் மிகவும் பிரபலமான மற்றும் கொண்டாடப்பட்ட சில போட்டியாளர்கள் மீண்டும் ஒன்றிணைந்து பங்கேற்று உள்ளனர். பிக்பாஸில் ஏற்கனவே இழந்த வெற்றி வாய்ப்பை பெறுவதற்கும், பார்வையாளர்களின் மனங்களை வெல்வதற்கும், தங்களை மீட்டுக் கொள்வதற்கும் இரண்டாவது வாய்ப்பை இந்த OTT வெர்ஷன் பிக்பாஸ் வழங்கி இருக்கிறது.

இதையும் படிங்க.. மீண்டும் வந்த ‘4 மணி ஷிவானி’.. அந்த ஃபோட்டோவை பார்த்தீங்களா?

பிக் பாஸ் அல்ட்டிமேட்டில் தற்போது மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்ற வனிதா விஜயகுமார், சீசன் 5-ல் பங்கேற்ற நிரூப் நந்தகுமார், சீசன் 1-ல் பங்கேற்ற ஜூலி, சீசன் 3-ல் பங்கேற்ற அபிராமி வெங்கடாசலம், சீசன் 5-ல் பங்கேற்ற தாமரை செல்வி, சீசன் 2-ல் பங்கேற்ற நடிகர் தாடி பாலாஜி, சீசன் 4-ல் பங்கேற்ற பாலாஜி முருகதாஸ், சீசன் 4-ல் பங்கேற்ற அனிதா சம்பத், சீசன் 1-ல் பங்கேற்ற நடிகை சுஜா வருணி, சீசன் 4-ல் பங்கேற்ற சுரேஷ் சக்ரவர்த்தி, சீசன் 2-ல் பங்கேற்ற ஷாரிக், சீசன் 5-ல் பங்கேற்ற அபிநய் மற்றும் சுருதி பெரியசாமி, சீசன் 1-ல் பங்கேற்ற கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் தற்போது பிக்பாஸ் அல்ட்டிமேட்டில் நுழைந்து உள்ளனர்.

இதையும் படிங்க.. 7வது மாச வளைகாப்பும் முடிந்தது.. ராஜா ராணி 2வில் இருந்து கிளம்புகிறாரா ஆல்யா மானசா?

இந்த ஷோ 24/7 லைவ் ஸ்ட்ரீமிங் என்பதால் போட்டியாளர்களின் அனைத்து செயல்களும் எடிட் செய்யப்படாமல் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் சக ஆண் போட்டியாளர்களான நிரூப், அபிநய், ஷாரிக் ஆகியோருடன் சேர்ந்து அபிராமி ஸ்மோக்கிங் ரூமில் தம் அடிக்கும் சீன் சோஷியல் மீடியாவில் பரவி கடும் விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் பிக் பாஸ் அல்ட்டிமேட் ஷோவில் முதல் நாளே நாமினேஷன் நடைபெற்றது. அப்போது நிரூப், அபிராமி வெங்கடாசலத்தை நாமினேட் செய்வதாக குறிப்பிட்டார்.

மேலும் அவரை நாமினேட்  செய்வதற்கான காரணத்தையும் நிரூப் கூறி இருக்கிறார். தான் முன்னர் அபிராமியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், அப்போது இருந்தது போல அபிராமி இப்போது இல்லை, நிறைய மாறி இருக்கிறார். அவர் தனிப்பட்ட வாழ்வில் என்ன நடந்ததால் அவர் இப்படி மாறி இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. நான் இங்கு வந்ததில் இருந்து அவரிடம் பேச கூட இல்லை என்று கூறினார் நிரூப். தான் முன்பு பழகிய அபிராமி தற்போது இல்லை என்பதால் அவரை நாமினேட் செய்ய நினைப்பதாக விளக்கம் கொடுத்து இருக்கிறார் நிரூப்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil, Vijay tv