Home /News /entertainment /

மிட்நைட் எவிக்ஷன் – பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறினார் அபிராமி - அடுத்தது யார்.!

மிட்நைட் எவிக்ஷன் – பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறினார் அபிராமி - அடுத்தது யார்.!

Bigg Boss

Bigg Boss

Bigg Boss Ultimate | சீசன் 3 இன் போட்டியாளராக கலந்து கொண்ட அபிராமி, இடையில் வெளியேறினார்.

இன்னும் இரண்டு நாட்களில் பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலே நடக்கப் போகிறது. பிக்பாஸ் அல்டிமேட்டின் வெற்றியாளர் யாராக இருக்கும், அடுத்தடுத்து யார் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக அபிராமி மிட்-நைட் எவிக்ஷனில் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் அல்டிமேட்டின் இறுதி போட்டியாளர்களாக, பாலாஜி முருகதாஸ், தாமரை செல்வி, நிரூப் நந்தகுமார், ஜூலி மரியானா, அபிராமி வெங்கடாசலம், மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், ஆறு போட்டியாளர்கள் ஐந்தாகக் குறைந்தது. பிக்பாஸ் முதல் சீசனில் இதுபோல மிட்நைட் எவிக்ஷன் நடைபெற்றது. அதற்குப் பிறகு அடுத்த சில நாட்களில் இறுதிப் போட்டியில் டாப் 5 போட்டியாளர்கள் இருந்தார்கள்.

அல்டிமேட்டில் ஹாட் சீட்டில் இருந்த அபிராமி மற்றும் ஜூலி இருவருமே எலிமினேட் செய்யப்படாததால், இந்த வாரத்தின் இடையில் யாரேனும் ஒருவர் வெளியேற்றப் படுவார்கள் என்று பலரும் கூறி வந்தனர். அதை உறுதி செய்யும் விதமாக நேற்று ஒளிபரப்பான எபிசோடில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் அல்டிமேட்டின் வைல்ட் கார்டு போட்டியாளராக ரம்யா பாண்டியன் நிகழ்ச்சியில் பாதிக்குமேல் வந்தார். அவர் இதுவரை நிகழ்ச்சியில் மூன்று வாரங்கள் மட்டும் தான் இருந்திருக்கிறார். எனவே இந்த வார மத்தியில் நடைபெறக்கூடிய எவிக்ஷனில் ரம்யா பாண்டியன் வெளியேறுவார் என்று கூறி வந்தனர். அது மட்டுமின்றி ரம்யா பாண்டியன் தவிர்த்து மற்ற அனைவருமே பிக்பாஸ் அல்டிமேட்ன் முதல் நாளில் இருந்தே போட்டி போட்டு வருகின்றனர்.



எனவே வேறு யாரையும் வெளியேற்றினால் அது அவர்களுக்கு நியாயமானதாக இருக்காது என்றும் கூறப்பட்டு வந்தது. மேலும் இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற டாஸ்கில் ரம்யா பாண்டியனின் காலில் மைல்டான ஃபிராக்ச்சர் ஏற்பட்டு அவர் தற்போது வில் சேரில் தான் உலா வருகிறார். எனவே இந்த காரணங்களால் ரம்யா பாண்டியன் தான் வெளியேற்றப்படுவார் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அபிராமி வெளியேற்றப்பட்டு விட்டார்.

Also Read : கவின் உடன் பிரேக்-அப் ஆக இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த லாஸ்லியா!

சீசன் 3 இன் போட்டியாளராக கலந்து கொண்ட அபிராமி, இடையில் வெளியேறினார். அதன் பிறகு பல திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்தார். பிக்பாஸ் அல்டிமேட்டின் தொடக்க வாரங்களில் பெரிதாக காணப்படவில்லை என்றாலும், கடினமான போட்டியாளராக மாறினார்.

பிக்பாஸ் அல்டிமேட்டின் எவிக்ட் ஆன போட்டியாளர்கள் விருந்தினர்களாக வந்துள்ளனர். அனிதா சம்பத் முதல் கெஸ்ட்டாக வந்தார். அதைத்தொடர்ந்து ஷாரிக், தாடி பாலாஜி மற்றும் அபினய் ஆகியோர் வந்தனர்.



 

இன்று மீண்டும் ஒரு எவிக்ஷன் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று யார் வெளியேறப்போகிறார் என்பது இன்று இரவு வெளியாகும் எபிசோடில் தெரியவரும். சென்ற வாரம் ஹாட் சீட்டில் இருந்ததால் ஜூலி வெளியேறுவாரா அல்லது ரம்யா பாண்டியனா என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read : பேக் போஸில் ஹாட்டாக புகைப்படம் வெளியிட்ட வேதிகா..

ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று நடைபெற இருக்கும் பிக்பாஸ் அல்டிமேட்டின் கிராண்ட் ஃபினாலேவில் பிக்பாஸின் ஆஸ்தான தொகுப்பாளரான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி கமல்ஹாசன் இறுதிப் போட்டிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்பது ரசிகர்கள் கோரி வருகின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: Abirami, Bigg Boss Tamil

அடுத்த செய்தி